தேசிய அனல் மின் கழகத்தின் துணை நிறுவனமான ஆர் இ எல் நிறுவனம் (NTPC REL), முதல் பசுமைக் கால கடனுக்காக, பேங்க் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த பசுமைக் கால கடனின் மதிப்பு 500 கோடி ரூபாயாகும். இது குறித்து தேசிய அனல் மின் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த தொகையானது அதன் இரண்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இது ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் நிறுவ உள்ள அதன் இரண்டு சோலார் திட்டங்களுக்கானது என்று அறிவித்துள்ளது.
ரூ.500 கோடி கடன்
என்டிபிசி ஆர்.இ.எல் நிறுவனம் (NTPC REL), பேங்க் ஆப் இந்தியாவில், 500 கோடி ரூபாய்க்கான 15 வருட கால முதல் பசுமைக் கடனுக்கு கையெழுத்திட்டுள்ளது. இந்த கடன் மூலம் ராஜஸ்தானில் 470 மெகா வாட் சோலார் திட்டத்திற்கும், இதே குஜராத்தில் 300 மெகாவாட் சோலார் திட்டத்திற்கும் கையெழுத்திட்டுள்ளது.
பசுமை கடன் என்றால்?
பசுமை கடன் என்பது சுற்றுசூழலில் தாக்கத்தினை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஒரு வகையான கடன் ஆகும். என்டிபிசி லிமிடெட் நிறுவனத்தின் 100% துணை நிறுவனமான என்டிபிசி ஆர்.இ.எல், தற்போது 3,450 மெகாவாட் திறனை கொண்டுள்ளது. இதில் 820 மெகாவாட் தற்போது கட்டுமான நிலையில் உள்ளது. இதில் 2,630 மெகா வாட் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
புதுபிக்கதக்க ஆற்றல் உற்பத்தி
என்டிபிசி ஆர்.இ.எல் நிறுவனம் கடந்த அக்டோபர் 7, 2021 அன்று பதிவு செய்தது. புதுபிக்கதக்க ஆற்றலை உருவாக்க, என்டிபிசி நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது. அந்த வகையில் தற்போது அதன் துணை நிறுவனம் மூலம் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது.
என்டிபிசி ஆர்.இ.எல்லின் இலக்கு
இந்த நிறுவனம் அடுத்த 2032-க்குள் 60 ஜிகாவாட் புதுபிக்கதக்க எரிசக்தி திறனை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. தற்போது 70 திட்டங்களில், 66 ஜிகாவாட் திறன் கொண்ட நிறுவப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 18 ஜிகாவாட் கட்டுமானத்தில் உள்ளது.
என்டிபிசி-யின் திட்டம்
இதே போல என்டிபிசி நிறுவனம் அதன் விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, கடன் பத்திர வெளியீடுகள் மூலம் 18,000 கோடி ரூபாய் மூலதனத்தை திரட்ட பங்குதாரர்களின், அனுமதியை பெற்றுள்ளதாக பொதுத் துறையைச் சேர்ந்த இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications