மத்திய அரசின் கீழ் இயங்கும் என் டி பி சி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், இன்று நவம்பர் 09, 2019, சனிக்கிழமை வெளியாகி இருக்கிறது. இன்று வெளியான என் டி பி சி நிறுவனத்தின் ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகளில் நிகர லாபம் மட்டும் 38 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்த செப்டம்பர் 2019 காலண்டில் நிகர லபம் 3,408 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2018-ல் என் டி பி சி நிறுவனத்தின் நிகர லாபம் 2,477 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 2019 காலாண்டில், என் டி பி சி நிறுவனத்தின் மொத்த வருவாய் 26,274 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதுவே கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டான செப்டம்பர் 2018-ல் 23,566 கோடி ரூபாய் ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படியே இந்த முதல் அரையாண்டு கணக்கையும் பார்த்துவிடுவோம். 2019 - 20 நிதி ஆண்டின் முதல் அரை ஆண்டான ஏப்ரல் - செப்டம்பர் 2019-ல் என் டி பி சி நிறுவனத்தின் நிகர லாபம் 6,249 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதுவே கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் ஏப்ரல் - செப்டம்பர் 2018 வரையான முதல் அரையாண்டை கணக்கிட்டுப் பார்த்தால் 5,166 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டி இருக்கிறது.
அதே போல மொத்த வருமானத்தை அரை ஆண்டுக்கு கணக்கிட்டால் 2019 - 20 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் 2019-ல் 51,546 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறது. கடந்த 2018 - 19 நிதி ஆண்டின் முதல் அரையாண்டான ஏப்ரல் - செப்டம்பர் 2018-ல் மொத்தம் ஈட்டிய வருமானம் 47,715 கோடி ரூபாயாக இருந்ததாம்.
என் டி பி சி நிறுவனத்தின் துணை நிறுவனங்களான Nabinagar Power Generating Company Ltd and Kanti Bijlee Utpadan Nigam Ltd ஆகிய இரண்டு நிறுவனங்களையும், என் டி பி சி நிறுவனத்துடனேயே இணைக்க, இன்று தான் என் டி பி சி நிறுவனத்தின் இயக்குநர் குழு அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications