அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் மீது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக எச்சரித்து 25 சதவீத வரியை இந்தியா மீது விதித்திருக்கும் வேளையில் அணு சத்தி துறையில் மிகவும் முக்கியமான ஒப்பந்தத்தை ரஷ்ய நிறுவனத்துடன் மத்திய அரசு நிறுவனம் கையெழுத்திட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அணு ஆற்றல் அதாவது நியூக்ளியர் எனர்ஜி துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெற அனுமதிக்கும் அணு ஆற்றல் மசோதா 2025 அல்லது SHANTI Bill ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணு ஆற்றல் துறையில் இதுவரையில் இந்திய அரசும், அரசு நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்து வந்த நிலையில் முதல் முறையாக தனியார் முதலீட்டுக்கு கதவுகளை திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் புதிய போட்டி உருவாகியுள்ளது.

இதற்கு மத்தியில் தான் இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC, ரஷ்யாவின் ரோசாட்டம் (Rosatom) மற்றும் பிரான்சின் EDF நிறுவனங்களுடன் ரகசிய ஒப்பந்தங்களை (non-disclosure agreement) கையெழுத்திட்டுள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பிரஷரைஸ்ட் வாட்டர் ரியாக்டர் (PWR) திட்டங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்ய உள்ளது. இது அணு மின் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தங்கள் அணு மின் திட்டங்களை அமைப்பது குறித்து ஆய்வு செய்வதை தாண்டி மொத்த அமைப்பின் சுழற்சியை உள்ளடக்கியது. அதாவது அணுஉலையை அமைப்பது குறித்து ஆய்வு செய்வது முதல்கட்டம் மட்டுநே அதை தொடர்ந்து இந்த அணு மின் திட்டத்தை அமைத்து நிர்வாகம் செய்து, இயக்குவது வரையில் அனைத்து கட்ட பணிகளுக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதோடு இந்த கூட்டணி உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. NTPC தனது மின்சார உற்பத்தியை 2047க்குள் 30 ஜிகாவாட் இலக்கை அடைய இந்த ஒப்பந்தத்தை செய்து உள்ளது. இந்திய அரசின் 100 ஜிகாவாட் இலக்கில் 30 சதவீதத்தை என்டிபிசி எட்ட வேண்டும் என்பதை இலக்காக வைத்துள்ளது.

மத்திய அரசு தனியார் துறை அணு மின் துறையில் நுழைய எளிதாக்க மசோதா கொண்டு வந்துள்ள நிலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களான ரஷ்யாவின் ரோசாட்டம், கொரியா எலக்ட்ரிக் பவர் கம்பெனி, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ், EDF போன்ற நிறுவனங்கள் இந்திய அணு மின் துறையில் ஆர்வம் காட்டுகின்றன.
NPCIL தவிர NTPC மட்டுமே அணு மின் நிலையம் கட்டும் பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. செலவு மற்றும் நிதி ஆதாரம் இத்துறை திட்டங்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் ரஷ்யாவின் தொழில்நுட்பத்தை குறைந்த செலவில் கொண்டு வர உதவும்.


Click it and Unblock the Notifications