ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல்.. ரூட்டு போட்டுக் கொடுத்த இஸ்ரேல்.. டிரம்ப் எடுக்கும் முடிவு!

அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் மிட்டேரம் தேர்தலும் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்தத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என அமெரிக்காவின் பிரபல அரசியல் விமர்சகரான டக்கர் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தலைமையிலான அரசு தொடர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்தாலும், ஈரான் - அமெரிக்க வைக்கப்படும் கோரிக்கைகளை இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இரு நாடுகளும் அறிவித்துள்ளது.

ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல்.. ரூட்டு போட்டுக் கொடுத்த இஸ்ரேல்.. டிரம்ப் எடுக்கும் முடிவு!

இதனால் அமெரிக்காவில் மிட்டேரம் தேர்தல் முடிந்த பின்பு அமெரிக்கா ஈரான் மீது பெரும் தாக்குதல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

குறிப்பாக தற்போதைய தாக்குதலில் இஸ்ரேல் பெரிய பங்கு வகிக்கும் எனக் கணிக்கப்படுவதால், அமெரிக்க ராணுவத்தையும், அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐயும் அதிகளவில் இன்புளுயன்சஸ் செய்து வருகிறது.

Also Read

இதை உறுதிப்படுத்தும் வகையில் டக்கர் கார்ல்சன் தனது நீண்ட டிவிட்டர் பதிவில், இஸ்ரேல் உளவுத் துறை அமெரிக்காவுக்கு, ஈரான் மீண்டும் தனது அணுசக்தி செறிவூட்டும் திட்டத்தைத் துவங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் புதிதாகத் துவங்க இருக்கும் போரில் அமெரிக்கா - இஸ்ரேலின் ஒற்றை இலக்காக Pickaxe மலையாக இருக்கப்போகிறது எனத் தெரிவித்துள்ளார் டக்கர் கார்ல்சன்.

ஏன் Pickaxe மலை டார்கெட் ஆக இருக்ககூடும்..?

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் தெற்கு பகுதியில் இருக்கும் கார்கஸ் மலைப் பகுதியில் இருக்கும் ஒரு முக்கிய இடம். ஈரானின் முக்கிய யூரேனியம் செறிவூட்டல் தளமான நாடன்ஸ் தளத்தில் 2010 முதல் பல்வேறு தாக்குதலுக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாகி வந்த நிலையில் 2020ல் பாதுகாப்பான தளத்தை உருவாக்கத் திட்டமிட்டு ஈரான் கார்கஸ் மலைத்தொடரில் 300 மீட்டர் நிலத்திற்கு அடியில் ஒரு பிரம்மாண்ட டனல் அமைப்புடன் யூரேனியம் செறிவூட்டல் தளத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரான் இதை மறுத்தாலும், மேற்கத்திய அணுசக்தி அமைப்புகளான IAEA போன்றவை இதை தொடர்ந்து உறுதியாகக் கூறிவருகிறது. இதில் என்ன முக்கியமான விஷயம் என்னவென்றால் Pickaxe மலை முழுக்க கிரைனைட் கற்களால் சூழ்ந்துள்ள மிகவும் பாதுகாப்பான கட்டமைப்பாக விளங்குகிறது.

Recommended For You

டக்கர் கார்ல்சன் தனது பதிவில் இத்தகைய பாதுகாப்பான கட்டமைப்பையும், யூரேனியம் செறிவூட்டல் தளத்தை அழிக்க அமெரிக்காவிடமும் சரி, இஸ்ரேலிடமும் சரி எவ்விதமான ஆயுதமும் இல்லை. அதாவது 300 மீட்டர் கிரைனைட்-க்குள் சென்று தாக்கும் திறன் கொண்ட ஆயுதம் இரு நாடுகளிடமும் இல்லை.

இத்தளத்தைத் தாக்குவதற்கு தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு அணுசக்தி தாக்குதல், இதற்குத் தொடர்ந்து பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவு கொடுத்து டிரம்பை செயல்படுத்த வலியுறுத்தி வருகிறார் என டக்கர் கார்ல்சன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்காக நெதன்யாகு தினமும் டிரம்ப்-க்கு போன் கால் செய்து வருவதாகவும், ஆனால் டிரம்ப் இதற்கான முடிவை அடுத்த வார இறுதியில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் டிரம்ப் ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான கருத்துக்களை ஜேடி வான்ஸ் மற்றும் ஸ்டீவ் விட்ஃகாப் ஆகியோரிடம் கேட்டு வருகிறார். டிரம்ப் ஈரான் மீது அணுசக்தி தாக்குதல் நடத்துவதற்கு விருப்பம் இல்லை என டக்கர் கார்ல்சன் தனது பதிவின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+