எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சில வருடங்களுக்கு முன்பு கூடுதல் சேவையாக இருந்த NVIDIA, முதலீட்டில் கேமிங் பிரிவில் அசைக்க முடியாத சக்கியாக மாறி இப்போது ஏஐ துறை இந்த நிறுவனம் இல்லையெனில் இயங்க முடியாது என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதன் நீட்சியாகத் தொழில்நுட்ப துறையில் புதிய சாதனை படைத்துள்ளது நிவிடியா நிறுவனம். உலகளவில் நிறுவனங்களின் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களின் பட்டியலில், சவுதி ஆராம்கோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது, தொழில்நுட்ப துறை உலக பொருளாதாரத்தில் செலுத்தும் ஆதிக்கத்தை காட்டுக்கிறது.

சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் முதல் 3 இடங்கள் மைக்ரோசாப்ட், ஆப்பிள், நிவிடியா ஆகியவை உள்ளது.
மார்ச் 1 ஆம் தேதி, டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையின் தாக்கம் நிவிடியா பங்குகளுக்கு சாதமான வர்த்தக உயர்வுக்கு வழிவகுத்தது. செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்ககளுக்கு டெல் நிறுவனம், நிவிடியா செயற்கை நுண்ணறிவு செயலி (AI processors) பொருத்தப்பட்ட சர்வர்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக அறிவித்தது.
இதன் எதிரொலியாக நிவிடியா பங்குகள் 4 சதவீதம் உயர்ந்து, 2 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பீட்டை முதன் முதலாக கடந்தது. டெல் நிறுவனம் கம்பியூட்டர் மட்டும் அல்லாமல் உயர்தர அதிநவீன சர்வர்களை சொந்தமாக தயாரித்து விற்கிறது.
இந்த செய்தியால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பிற நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான அதிகரித்தன. Nasdaq 100 குறியீட்டு 1.5 சதவீதம் உயர்ந்தது, மைக்ரோசிப் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தன. குறிப்பாக, நிவிடியா நிறுவன பங்குகள் மிக அதிக அளவில் உயர்ந்தன.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 1 ஆம் தேதி கலிபோர்னியாவின் பாலோ ஆல்ட்டோவில் நடைபெற்ற 2024 ஸ்டான்ஃபோர்ட் பொருளாதார கொள்கை ஆராய்ச்சி நிறுவன மாநாட்டில் கலந்து கொண்ட நிவிடியா தலைமை செயல் அதிகாரி
ஜென்சன் ஹுவாங், செயற்கை பொது நுண்ணறிவு (artificial general intelligence - AGI) ஐந்து ஆண்டுகளுக்குள் வந்தடையக்கூடும் என்று கருத்து தெரிவித்தார். இது, தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிவிடியாவின் AI பிராசசர்களை தான் ஓப்பன்ஏஐ சாட்ஜிபிடி முதல், டிவிட்டர் கோர்க் வரையில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பல பில்லியன் டாலர்களுக்கு ஏஐ பிராசசர்கள் வாங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications