ஜென்சன் ஹுவாங் மீண்டும் சிஇஓ-ஆ..? Nvidia நிர்வாக குழுவின் ஒற்றை பதில்.. 'வேண்டவே வேண்டாம்'!!

ஏஐ சிப் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் என்விடியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் கடந்த வாரம் 3 பெண்கள் உடனான கள்ள உறவு காரணமாக அனைத்து நிர்வாக பொறுப்பில் இருந்தும் வெளியேறினார்.

ஆனால் என்விடியா எதிர்காலத்தைக் கருதி, ஏஐ துறையின் வளர்ச்சியை உறுதி செய்ய மீண்டும் என்பதற்காக ஜென்சன் ஹுவாங்-ஐ மீண்டும் சிஇஓவாக நியமிக்கப்பட வேண்டும் என 2 லட்சம் பேர் கையெழுத்து போராட்டம் நடத்தினர், இதேபோல் டெக் துறையில் எலான் மஸ்க் உட்படப் பலரும் ஜென்சனுக்கு ஆதரவு தெரிவித்து பெரிய அளவில் லாபி செய்யப்பட்டது.

இதை நம்பி ஜென்சன் ஹுவாங் மீண்டும் தான் சிஇஓ-வாக வர விருப்பம் தெரிவித்து என்விடியா நிர்வாக குழுவிடம் தனது பரிந்துரையை வைத்தார்.

ஜென்சன் ஹுவாங் மீண்டும் சிஇஓ-ஆ..? Nvidia நிர்வாக குழுவின் ஒற்றை பதில்.. 'வேண்டவே வேண்டாம்'!!

நிர்வாக குழு முடிவு

பெரும் நெருக்கடிக்கு மத்தியில் ஜென்சன் ஹுவாங்-ன் பிரந்துரை என்விடியா நிர்வாக குழுவில் விவாதத்திற்குக் கொண்டு வரப்பட்டது, இந்த விவாதத்தில் என்விடியா நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஜென்சன் ஹுவாங் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும்...

மீண்டும் அவர் சிஇஓ பதவிக்கு வருவதை யாரும் விரும்பவில்லை என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக என்விடியா நிர்வாக குழு தலைவர் ஹார்வி ஜோன்ஸ் செவ்வாய்க்கிழமை நடந்த காலாண்டு முடிவுகளை வெளியீட்டின் போது தெரிவித்தார்.

இதன் மூலம் என்விடியா நிர்வாகத்தில் இனி ஜென்சன் ஹுவாங் தலையீடு இருக்காது, இதேபோல் நிர்வாக குழுவும் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

Also Read

என்விடியா காலாண்டு முடிவுகள்

செப்டம்பர் காலாண்டில் என்விடியா நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 103 சதவீதம் உயர்ந்து 115.8 பில்லியன் டாலராக உள்ளது, இதேபோல் லாபம் ஒரு பங்கிற்கு 2.68 டாலராக உள்ளது, இது சந்தை கணிப்பைக் காட்டிலும் அதிகமாகும்.

என்விடியா முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பாக டிசம்பர் காலாண்டில் என்விடியாவின் வருவாய் வளர்ச்சி என்பது 130 பில்லியன் டாலராக இருக்கும் என கணித்துள்ளது, இதேபோல் அடுத்த நிதியாண்டில் வருவாய் 75 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனவும் தனது கணிப்பை வெளியிட்டு உள்ளது.

Recommended For You

ஜெப் பெசோஸ் அட்வைஸ்

இதேவேளையில் என்விடியா நிர்வாகத்திற்கு தற்போது இருக்கும் மிக முக்கியமான சவால் புதிய சிஇஓ-வை தேர்வு செய்வது தான். இதுக்குறித்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூறுகையில், என்விடியா மிகவும் கடினமான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

இத்தகைய ஒரு நிறுவனம் புதிய சிஇஓ-வை வெளியில் இருந்து நியமித்தால் வர்த்தகம் + நிர்வாகத்தில் வெற்றி அடைவது கடினம். எனவே என்விடியா நிர்வாக குழு நிறுவனத்திற்குள் இருக்கும் அதிகாரியை தான் சிஇஓ-வாக நியமிக்க வேண்டும் என தான் ஒரு அட்வைஸ் ஆக கூறுவதாக செவ்வாய்க்கிழமை நடத்த ஒரு டெக் கூட்டத்தில் பேசினார் ஜெப் பெசோஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+