கள்ள காதல் விவகாரம்: ரூ.7.5 லட்சம் கோடியை இழக்கும் Nvidia தலைவர் ஜென்சென் ஹுவாங்..??

உலக புகழ்பெற்ற அதிநவீன ஏஐ சிப்கள் தயாரிப்பு நிறுவனம் Nvidia. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங் கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். அதுவும் சீன அரசின் உளவாளியாக கருதப்படும் பெண்ணுடன் அவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சென் ஹுவாங், அலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் தனக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக உண்மையை ஒப்பு கொண்டுள்ளார். இதற்காக தனது மனைவி, குடும்பம் மற்றும் என்விடியா ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் தற்போது இந்த விவகாரம் தான் பூதாகரமாக வெடித்துள்ளது.

கள்ள காதல் விவகாரம்: ரூ.7.5 லட்சம் கோடியை இழக்கும் Nvidia தலைவர் ஜென்சென் ஹுவாங்..??

இந்நிலையில் ஜென்சென் ஹுவாங் தனது மனைவி லோரி ஹுவாங்கை விவாகரத்து செய்ய போகிறாரா, அப்படி விவாகரத்து செய்தால் லோரிக்கு அவர் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டி இருக்கும் என்ற விவாதம் உலகளவில் எழுந்துள்ளது.

ஜென்சென் ஹுவாங் தனது 17 வயதில், லோரியை சந்தித்து காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் திருமணம் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 1993-ல் தனது 30 ஆவது வயதில் ஜென்சென் ஹுவாங் என்விடியா நிறுவனத்தை தொடங்கினார்.

தற்போது இருவரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கின்றனர். இந்த மாகாண சட்டங்களின்படி, திருமணத்திற்கு பிறகு ஈட்டப்படும் சொத்துகள் மற்றும் வருமானங்கள் கணவன் - மனைவி இருவருக்குமான பொதுவான சொத்துகளாக கருதப்படுகின்றன.

Also Read

தற்போது ஜென்சென் ஹுவாங்கின் சொத்துகளில் சுமார் 99% என்விடியா நிறுவனத்தின் பங்குகள் மூலமாகவே வந்துள்ளது. என்விடியா நிறுவனம் அவர்கள் திருமணமான பிறகே தொடங்கப்பட்டதால், கலிபோர்னியா சட்ட விதிகளின்படி விவாகரத்து என்று வந்தால் லோரி ஹுவாங் தனது கணவரின் சொத்துகளில் கணிசமான பகுதிக்கு உரிமை கோர வாய்ப்புள்ளது.

Forbes தரவுகளின்படி சுமார் 162.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர் ஜென்சென் ஹுவாங். இதில் அவரது மனைவி லோரி ஹுவாங் பாதியை அதாவது 81 பில்லியன் டாலர்கள் வரை உரிமை கோர முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது மொத்தம் 15.16 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட ஜென்சென் ஹுவாங் தனது மனைவிக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய கொடுக்க வேண்டி இருக்கும்.

இது நடந்தால் இதுவரையிலான வரலாற்றில் மிக பெரிய விவாகரத்து செட்டில்மென்ட்களில் ஒன்றாக மாறக்கூடும். இதற்கு முன்பு அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விவாகரத்தின் போது தனது மனைவிக்கு 3 லட்சம் கோடி ரூபாயை செட்டில்மெண்டாக கொடுத்திருந்தார், அதுவே வரலாற்றிலேயே அதிகபட்ச விவாகரத்து செட்டில்மெண்ட் தொகையாக இருந்தது.

Recommended For You

தற்போது வரை இருதரப்பிலும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழக்குகள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த கணக்கீடுகள் அனைத்தும் கணிப்புகள் தான். இதற்கிடையே என்விடியா வாரியம் ஜென்சென் ஹுவாங்கின் கள்ள உறவு குறித்து சுயாதீனமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உறவால் தேசிய பாதுகாப்புக்கோ அல்லது என்விடியா நிறுவன ரகசியங்களுக்கோ எந்தவித ஆபத்தும் விளைந்திருக்க வாய்ப்பில்லை என நம்புவதாக தெரிவித்துள்ளது.

என்விடியா நிறுவனத்தின் பங்குகள் உலகளவில் தொழில்நுட்ப துறையின் முதுகெலும்பாக விளங்குவதால், தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங்கின் இந்த தனிப்பட்ட விவகாரம், நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் வரவிருக்கும் விசாரணைகளின் முடிவுகள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+