கள்ள காதல் விவகாரத்தில் சிக்கிய ஜென்சென்.. NVIDIA தலைமை பொறுப்பு இந்திய வம்சாவளிக்கு செல்கிறதா?

ஏஐ துறையில் உலகளவில் கொடிகட்டி பறக்கும் என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் , நிறுவனர்களில் ஒருவருமான ஜென்சன் ஹுவாங் கள்ள காதல் விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். சீன உளவாளியாக கருதப்படும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் அவர் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க கார்ப்பரேட் சட்டங்களின் படி என்விடியா நிறுவனம் ஜென்சென் ஹுவாங் விவகாரம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜென்சென் ஹுவாங், என்விடியா தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டிய சுழல் ஏற்பட்டால், அவருக்கு பதிலாக அந்த பொறுப்பு யாரிடம் செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கள்ள காதல் விவகாரத்தில் சிக்கிய ஜென்சென்.. NVIDIA தலைமை பொறுப்பு இந்திய வம்சாவளிக்கு செல்கிறதா?

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜெய் பூரியின் பெயர் தீவிரமாக பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்விடியா நிறுவனத்தில் மிக மூத்த மற்றும் செல்வாக்குள்ள தலைவர்களில் ஒருவராக ஜெய் பூரி திகழ்கிறார். ஜெய் பூரி, என்விடியா நிறுவனத்தின் Worldwide Field Operations பிரிவின் நிர்வாக துணை தலைவராக நீண்டகாலம் பணியாற்றியுள்ளார்.

என்விடியாவின் உலகளாவிய வணிகம், விற்பனை, வணிக மேம்பாடு, கூட்டாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் அனைத்தையும் இவர்தான் முன்னின்று கவனித்து வந்தார். இவர் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். பிரபல கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்தவர்.

Also Read

என்விடியாவில் இணைவதற்கு முன்பு, இவர் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அங்கு சேல்ஸ்,மார்க்கெட்டிங், மேலாண்மை போன்ற பல முக்கிய உயர் பதவிகளை வகித்துள்ளார். மேலும், Hewlett-Packard மற்றும் Texas Instruments நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

2005ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தில் இணைந்த ஜெய் பூரி, நிறுவனத்தின் உலகளாவிய வளர்ச்சிக்கும், விற்பனை உத்திகளுக்கும் மிக முக்கிய பங்காற்றியுள்ளார். என்விடியாவின் வளர்ச்சியில் இவரது பங்கு ஈடு இணையற்றது. இந்நிலையில் தான் தலைமை பொறுப்பு இவர் வசம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

Also Read

என்விடியா நிறுவனம் உலகளவிலான ஏஐ புரட்சியின் மையப்புள்ளியாக திகழ்கிறது. இதற்கு ஜென்சன் ஹுவாங்கின் தொலைநோக்குப் பார்வை தான் காரணம் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் செய்த ஒரு தவறு சொத்து மதிப்பை இழக்க செய்து பதவியையே கூட இழக்கும் அபாயத்தில் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+