Nvidia தலைவர் ஜென்சென் ஹுவாங்கிற்கு சீன உளவாளியுடன் தொடர்பு? அமெரிக்க உளவு துறை அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவின் பிரபல முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங். உலகின் முன்னணி ஏஐ சிப்களை இவரது நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜென்சென் ஹுவாங்கிற்கு சீனாவை சேர்ந்த உளவாளி பெண் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் எழுப்பியுள்ளது.

அலிஸ் ஹுவாங் என்ற சீன பெண் வணிகர், சிங்கப்பூரை தளமாக கொண்ட மெகாஸ்பீட் என்ற டேட்டா சென்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர். இவர் என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங்குடன் நெருக்கமாக இருக்கிறார். இவர் சீனாவுக்காக உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Nvidia தலைவர் ஜென்சென் ஹுவாங்கிற்கு சீன உளவாளியுடன் தொடர்பு? அமெரிக்க உளவு துறை அதிர்ச்சி தகவல்..!!

ஜென்சென் ஹுவாங்குக்கும் அலிஸ் ஹுவாங்குக்கும் இடையே நெருக்கமான உறவு இருந்ததாக உளவுத்துறை நம்புகிறது. அமெரிக்காவின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு சிப்கள் சீனாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், இதன் மூலம் அமெரிக்காவின் ரகசிய தகவல்களை சீனா பெற வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை கவலை தெரிவித்தது.

Also Read

மேலும் என்விடியா தயாரிக்கும் அதிநவீன ஏஐ சிப்களின் ரகசியங்களை அவர் பெற்று சீன அரசுக்கு தெரிவித்திருக்கலாம் என்றும் உளவுத்துறை கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இது குறித்த உளவுத்துறை அறிக்கைகள் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், என்விடியா நிறுவனத்தின் வர்த்தகம் அமெரிக்ப் பொருளாதாரத்திற்கும் பங்கு சந்தைக்கும் மிகவும் முக்கியமானது என்பதாலும், சீனாவுடனான வர்த்தக உறவுகளில் கூடுதல் சிக்கல்களை தவிர்க்கும் நோக்கத்தில் டிரம்ப் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என சொல்லபப்டுகிறது.

Recommended For You

இதற்கிடையே ஜென்சென் ஹுவாங் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களையும் அதிகாரிகளையும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். இது ஒரு நிறுவன தலைவரின் பணிகளில் ஒன்றாகும். அலிஸ் ஹுவாங்குடன் நடைபெற்ற சந்திப்புகளில் எந்தவிதமான தேசிய பாதுகாப்பு ரகசியங்களோ அல்லது முக்கிய வணிக ரகசியங்களோ பகிரப்படவில்லை என என்விடியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் லியூ சாங், இந்த உளவு குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் அவதூறானவை என பதில் தந்துள்ளார். சீன அரசு பெண்களை உளவாளிகளாக அனுப்பி அமெரிக்க தொழிலதிபர்களை கையில் போட்டு ரகசியங்களை பெறுவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+