மும்பை: உலகின் முன்னணி ஏஐ தொழில்நுட்ப நிறுவனமாக என்விடியா (Nvidia)செயல்படுகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் ஜென்சென் ஹூவாங், தனக்கு பிடித்த உணவு சிக்கன் பிரியாணி என கூறியுள்ளார்.
உலகளவில் தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் கருவிகளுக்கு தேவையான ஸ்மார்ட் சிப்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது என்விடியா நிறுவனம். அமெரிக்காவை சேர்ந்த என்விடியா நிறுவனம் உலகிலேயே இந்த பிரிவில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது. இதனால் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரிக்கும் வேளையில், அதன் உரிமையாளர் ஜென்சென் ஹூவாங்கின் சொத்து மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சென் ஹூவாங் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். தன்னுடைய இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக மும்பையில் நடைபெற்ற என்விடியா செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இந்தியாவில் தனக்கு பிடித்த உணவு குறித்து குறிப்பிட்ட அவர் சிக்கன் பிரியாணி என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து விரிவாக உரையாற்றிய ஜென்சென் ஹூவாங் சிக்கன் பிரியாணியை உதாரணமாகக் கொண்டு உள்ளுணர்வு மற்றும் நுண்ணறிவுக்கு இடையிலான தொடர்பை விளக்கினார்.
உதாரணமாக நுண்ணறிவுக்கு சிந்தனை தேவை, சிந்தனைக்கு பகுத்தறிவு தேவை எனக்கு பிடித்த இந்திய உணவு எது என்று நீங்கள் கேட்டால் சிக்கன் பிரியாணி என்று நான் கூறுவேன். நான் அதைப்பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை அதைப்பற்றி நான் தர்க்கம் செய்ய வேண்டியது இல்லை,ஏனென்றால் எனக்கு அது தெரியும் எனக் கூறியுள்ளார்.
மனிதர்களைப் போலவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு உடனடியாக சில விஷயங்களை அதிக சிந்தனை இன்றி நினைவுபடுத்த முடியும் என்பதை நோக்கமாக கொண்டு தான் இந்த சிக்கன் பிரியாணி உதாரணத்தை அவர் குறிப்பிட்டார்.
அப்போது மனிதர்களின் வேலைகளை செயற்கை நுண்ணறிவு பறித்து விடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த ஜென்சென் ஹூவாங் எனக்கு அது முற்றிலும் தெரியாது, ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நபர்கள் உங்களுடைய வேலையை பறிக்கப் போகிறார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும் என்விடியா நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் தன்மை கொண்டது என தெரிவித்தார்.
நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது மனிதர்கள் அவர்களுக்கான உதவியாளராக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நியமனம் செய்வார்கள், மனிதர்கள் மறக்கும் விஷயங்களை எல்லாம் நினைவு படுத்த கூடிய ஒரு உதவியாளராக செயற்கை நுண்ணறிவு திறன் இருக்கும் என கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications