Nvidia ஜென்சன் ஹுவாங் விவகாத்தில் அடிப்படும் இந்தியர் பெயர்.. யார் இந்த ஜெய் பூரி..?

உலகையே கட்டியாளப்போகும் செயற்கை தொழில்நுட்பத்திற்கு, அஸ்திவாரமாக இருக்கும் என்விடியா நிறுவனத்தின் தலைவர் ஜென்சன் ஹூவாங் 3 பேர் உடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த காரணத்தால், இந்நிறுவனத்தின் அனைத்து நிர்வாக பணிகளில் இருந்து விலகியுள்ளார்.

இதேவேளையில் ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், என்விடியா நிறுவனத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் மீண்டும் ஜென்சன் ஹுவாங்-ஐ என்விடியா சிஇஓ பதவியில் அமர வைக்க பெரும் முயற்சி நடத்து வருகிறது.

Nvidia ஜென்சன் ஹுவாங் விவகாத்தில் அடிப்படும் இந்தியர் பெயர்.. யார் இந்த ஜெய் பூரி..?

இதற்காக 1.7 லட்சம் பேரின் கையெழுத்து போராட்டம், பெரும் தலைகளான எலான் மஸ்க், எபிக் கேம்ஸ் நிறுவனத்தின் Tim Sweeney, ஓய் காம்பினேட்டர் தலைவர் கேரி டான், உபர் டிராவிஸ் மற்றும் டிரம்ப் அரசு ஆதரவுடன் பல பெரும் முதலீட்டாளர்கள் லாபியில் இறக்கியுள்ளனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் என்விடியா நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய இந்தியரான ஜெய் பூரி என அழைக்கப்படும் அஜய் கே பூரி பெயர் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது.

Also Read

இதற்கு முக்கிய காரணம், ஜென்சன் ஹுவாங்-ன் செயல்பாடுகள், இவர் மீது ஏற்கனவே திருமணத்திற்கு மீறிய உறவில் உள்ள குற்றச்சாட்டை இருக்கும் வேளையில், உயர் அதிகாரிகளையும், சக நிர்வாக உறுப்பினர்களை எவ்வாறு மரியாதைக் குறைவாக நடத்துகிறார் என்பதைக் காட்டுகிறது ஜெய் பூரி விவகாரம்.

என்விடியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான ஜெய் பூரி மீது கடுமையான கருத்துக்கள் வைக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

உதாரணமாக இந்த வருடம் பிப்ரவரி மாதம், என்விடியா நிறுவனத்தில் இருக்கும் 30க்கும் அதிகமான மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ரகசியக் கூட்டத்தில், ஜென்சன் ஹுவாங், ஜெய் பூரியைப் பார்த்து, உங்களுக்கு flu வர வேண்டும், அது மேலும் மோசமாக வேண்டும் என்று ஹுவாங் கூறியதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மற்றொரு நிகழ்வில் நீங்கள் இறந்துவிட்டால் நிம்மதியாக இருக்கும் என்ற வகையிலும் ஹுவாங் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு சம்பவத்தின் போதும் ஜெய் பூரி எவ்விதமான எதிர் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என என்விடியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் நிர்வாக அதிகாரிகளை ஜென்சன் ஹுவாங் இதுபோன்று கோபமாகப் பேசுவது புதிதல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜென்சன் ஹுவாங் நிறுவன ஊழியர்களை எப்படி நடத்துகிறார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு உள்ளது.

மேலும் ஜெய் பூரி என்விடியா நிறுவனத்திற்கு புதியவர் இல்லை, 2005ல் இந்நிறுவனத்தில் உலகளாவிய விற்பனை பின் உயர் துணை தலைவராக சேர்ந்து பின்பு உலகளாவிய ஃபீல்டு ஆப்ரேஷன்ஸ் பிரிவின் தலைவராக உயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் ஜூலை மாதம் தனது பதவியில் இருந்து மொத்தமாக வெளியேறுவதாக அறிவித்தார் ஜெய் பூரி, ஆனால் இன்றளவும் என்விடியா நிறுவனத்தின் உயர் ஆலோசகர் பணியில் உள்ளார் ஜெய் பூரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+