Nvidia: செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரும் புரட்சிக்கு வித்திட்ட, சக்தி வாய்ந்த ஏஐ சிப்-ஐ உருவாக்கிய என்விடியா நிறுவனம், அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளது. உலகின் முன்னணி டெக் நிறுவனங்களைத் தனது முக்கிய வாடிக்கையாளராகப் பெற்றுப் பல பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது என்விடியா. இதன் மூலம் கடந்த 3 வருடத்தில் என்விடியா நிறுவனம் வர்த்தகத்திலும் சரி, பங்கு விலையிலும் சரி பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்தது.
ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு துறையின் எதிர்காலம், ஆபத்து குறித்த முதலீட்டாளர்களின் கேள்விகளால், சிப் தயாரிப்பில் முன்னோடியாகத் திகழும் என்விடியா-வின் பங்குகள் செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகத்தில் 9.53% சரிந்தது.

இதன் மூலம் என்விடியா-வின் சந்தை மூலதனம் ஒரே நாளில் 279 பில்லியன் டாலர் அதாவது 23,44,158 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. இது என்விடியா நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சியாகும்
அமெரிக்க பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை வர்த்தகம் மூடப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.65 டிரில்லியன் டாலராக இருந்தது. என்விடியாவின் பங்குகள் கடந்த வாரமாகத் தொடர்ந்து சரிவடைந்து வருகின்றன, கடந்த ஐந்து வர்த்தக நாளில் என்விடியா பங்குகள் சுமார் 13.65% சரிவைப் பதிவு செய்துள்ளது.
என்விடியாவின் பங்கு விலையில் தொடர்ந்து சரிய முக்கியமான காரணங்கள் இதுதான்:
அமெரிக்க நீதிமன்றத்தின் வழக்கு..!: அமெரிக்க நீதித்துறை, என்விடியாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இந்நிறுவனம் வர்த்தக சந்தையைப் பிடிக்க முறையற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றுவதாகக் குற்றம்சாட்டப்பட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
என்விடியா நிறுவனம் சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் செய்யும் ஒப்பந்தம் மூலம் மற்ற சப்ளையர்களுக்கு மாறுவதைக் கடினமாக்குகிறது மற்றும் அதன் AI சிப்ஸ்-ஐ பிரத்தியேகமாகப் பயன்படுத்தாதவர்களை மறைமுகமாகத் தண்டிக்கிறது என்றும் குற்றச்சாட்டப்பட்டு உள்ளது. இப்படி என்விடியா தனது சந்தை ஆதிக்கத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாக விசாரணை தொடங்கியது.
சமீபத்தில் ஆப்பிள், கூகுள், பேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சந்தை ஆதிக்கத்தைத் துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது, தற்போது இதில் என்விடியா-வும் சிக்கிக்கொண்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மந்தமான வருவாய் அறிக்கை: என்விடியா நிறுவனம் தற்போது நிலையான வளர்ச்சி மற்றும் லாபம் கொண்டு இருக்கும் போதிலும், சந்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத அளவுக்குத் தனது காலாண்டு வருவாய் கணிப்பை வெளியிட்டு உள்ளது. இது என்விடியா முதலீட்டாளர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு பலவீனம்: உலகளவில் ஏஐ துறையின் வளர்ச்சி பெரும் கேள்வியாக உருவெடுத்திருக்கும் வேளையில், அமெரிக்கப் பங்குச்சந்தையில் சிப் இன்டெக்ஸ் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. AI மற்றும் சிப் இன்டெக்ஸ்-ல் ஏற்பட்ட சரிவு அமெரிக்கப் பங்குச்சந்தையின் நேற்றைய வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
AI வளர்ச்சி குறித்த அச்சம்: என்விடியா தொடர்ந்து தனது AI சிப் சார்ந்த முதலீடுகளை இரட்டிப்பாக்கும் போது, AI முதலீடுகளிலிருந்து மிகவும் தாமதமாக லாபம் பெற வழிவகுக்கும். மேலும் கடந்த சில வாரங்களில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா உள்ளிட்ட ஏஐ சார்ந்த நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவைப் பதிவு செய்துள்ளது.
OpenAI உடன் கூட்டணி: ChatGPT உருவாக்கிய OpenAI நிறுவனம் தற்போது 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக மதிப்பிடப்படும் வேளையில், புதிய நிதி திரட்டல் சுற்றின் ஒரு பகுதியாக என்விடியா முதலீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்துகிறது. இது வெற்றி அடையும் பட்சத்தில் என்விடியா மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை அதிகரிக்கும்.
என்விடியா வாடிக்கையாளர்கள் பட்டியல்: சிப் தயாரிப்பாளரான என்விடியா-வின் வாடிக்கையாளர் பட்டியலில் தற்போது மைக்ரோசாஃப்ட், அல்பாபெட், அமேசான், எக்ஸ், மெட்டா ஆகியவை உள்ளது. இந்த நிறுவனங்கள் ஏஐ துறையில் 2024 இல் சுமார் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கும் காரணத்தால் இதில் பெரும்பகுதி என்விடியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications