செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (Nvidia) அமெரிக்காவில் 5வது நிறுவனமாக 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை பெற்ற நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் மிகவும் எலைட் கிளப் ஆக இருக்கும் 1 டிரில்லியன் டாலர் பட்டியலில் Nvidia சேர்ந்துள்ளது.
1 டிரில்லியன் டாலர் பட்டியலில் தற்போது அமெரிக்காவில் ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பபெட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில் 5வது அமெரிக்க நிறுவனமாக இப்பட்டியலில் Nvidia சேர்ந்துள்ளது. 1 டிரில்லியன் டாலர் பட்டியலில் சேர்ந்த முதல் நிறுவனம் ஆப்பிள், 2018-லேயே ஆப்பிள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்றுள்ளது.

Nvidia நிறுவனத்தின் பங்குகளில் அமெரிக்க சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 30 சதவிகிதம் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் அதன் சந்தை மதிப்பை சுமார் 950 பில்லியன் டாலரை வரையில் உயர்த்தியது. இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் Nvidia நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர் அளவை எட்டியது.
இந்த சாதனையின் மூலம், ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பாபெட் மற்றும் அமேசான் ஆகியவற்றுடன், என்விடியா ஐந்தாவது அமெரிக்க நிறுவனமாக 1 டிரில்லியன் டாலர் பட்டியலில் சேர்த்துள்ளது.
Nvidia நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியின் கணிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் உந்து சக்தியாக இந்நிறுவனத்தின் சிப் இருக்கும் காரணத்தாலும் வருவாய் குறித்த கணிப்பு என்விடியாவின் பங்குகளை வியாழக்கிழமை வர்த்தகத்தில் 30 சதவிகிதம் வரையில் உயர்த்தி இன்று 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை கொண்டு உள்ளது.

AI தொழில்நுட்பம் சிறப்பாக இயங்க தேவையான செமிகண்டக்டர் சிப்-களை தயாரிப்பதிலும், இத்துறையில் 360 கோணத்திலும் நிபுணத்துவம் பெற்ற உலகின் மிகப்பெரிய செமிகண்டக்டர் சிப்மேக்கராக, என்விடியா உள்ளது. இது மட்டும் அல்லாமல் உலகளாவிய டோட்டா சென்டர், ChatGPT போன்ற ஜெனரேட்டிவ் AI கருவிகளை இணைக்கும் முக்கிய கருவியாக Nvidia நிறுவனத்தின் சிப்கள் விளங்குகிறது.


Click it and Unblock the Notifications