அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவனங்கள் மீதான அதிகப்படியான முதலீடுகள் காரணமாக எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் குறியீடுகள் திங்கட்கிழமை புதிய உச்சத்தைத் தொட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் முடிவில் உலகின் டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக ஆப்பிள் முதல் இடத்திலிருந்த நிலையில் கடந்த 3 வருடத்தில் அவ்வப்போது மைக்ரோசாப்ட் முதல் இடத்தை தட்டிப்பறித்து வந்தது.

இதனால் முதல் இடத்திற்கு ஆப்பிள் - மைக்ரோசாப்ட் மத்தியில் குழாயடி சண்டையாக இருக்கும் வேளையில் சத்தமில்லாமல் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா.
அமெரிக்கப் பங்குச்சந்தையின் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முதலீட்டாளர்களின் அதிகப்படியான ஆதரவு காரணமாக என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு யாரும் எதிர்பார்க்காமல் 3.3 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டி புதிய உயர்வைத் தொட்டு உள்ளது.
கடந்த 5 வருடத்தில் டெக் உலகில் என்விடியா இல்லையெனில் அணுவும் அசையாது என்ற வகையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்த பின்பு, என்விடியாவின் சிப் டிமாண்ட் பெரும் டிமாண்டில் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடுகளுக்குச் சக்திவாய்ந்த செமிகண்டக்டர் சிப் தேவை, என்வியா ஆரம்பம் முதல் கேமிங் சிப் தயாரிப்பில் இருக்கும் காரணத்தால் சக்திவாய்ந்த சிப்-களை தயாரிப்பதில் கில்லியாக மாறியது என்விடியா.
இந்த கேமிங் சிப் டிசைனை அடிப்படையாக வைத்த தற்போது AI சேவைக்கான சக்திவாய்ந்த சிப்களை அசால்ட்டாக தயாரித்து வருவது மட்டும் அல்லாமல் என்விடியா தயாரிப்புக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு திறன் வாய்ந்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதேபோல் சந்தையில் ஏஐ சிப்-களுக்கு அதிகரித்து வரும் டிமாண்ட் காரணமாக, மார்ச் காலாண்டில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதற்கான என்விடியா நிறுவனத்தின் பயணம் அபாரமான எண்களை உருவாக்கியுள்ளது. அவற்றைப் பார்ப்போம்:
செவ்வாய்க்கிழமை முடிவில் என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 3.334 டிரில்லியன் டாலர். இது மைக்ரோசாப்ட்-ன் 3.317 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைக் காட்டிலும் அதிகம். இதன் மூலம் மைக்ரோசாப்ட்-ஐ 2ஆம் இடத்திற்கும் ஆப்பிள்-ஐ 3.286 டிரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திற்கும் தள்ளியுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு, என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு வெறும் 1 டிரில்லியன் டாலரை மட்டுமே கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. AI பவர் மூலம் ஒரு வருடத்தில் இதன் சந்தை மதிப்பு 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மட்டும் என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 113 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று என்விடியா பங்குகளின் முடிவில் இதன் விலை 135.58 டாலராகும். இரண்டு வாரங்களுக்கு முன்பு பங்கு விலை $1,200 க்கு மேல் இருந்தது.
ஆனால், ஜூன் 7 ஆம் தேதி பங்குச்சந்தை மூடப்பட்ட பிறகு, என்விடியா நிறுவனம் 10-க்கு-1 என்ற பங்கு பிரிவை (stock split) செயல்படுத்தியது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் ஏற்கனவே வைத்திருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் கூடுதலாக ஒன்பது பங்குகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் என்விடியா பங்கு விலை முதலீட்டாளர்களுக்கு மலிவானதாக மாறியது, இதன் எதிரொலியாக ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை வாங்கியது மூலம் என்விடியா சந்தை மதிப்பு 3.334 டில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் என்விடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 32% உயர்ந்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications