என்விடியாவின் வீழ்ச்சி.. ஏஎம்டி, பிராட்காம் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்.. ரூட்டை மாற்றிய முதலீட்டாளர்கள்..!!

உலகின் மிகப்பெரிய ஏஐ சிப் நிறுவனமான என்விடியா-வின் உயர்மட்ட நிர்வாகத்தில் யாரும் எதிர்பார்க்காத பூகம்பம் வெடித்து இந்நிறுவனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கியுள்ளது.

என்விடியா-வின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஜென்சன் ஹுவாங் 3 பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தது தெரியவரவே, தானாக முன்வந்து அனைத்து நிர்வாக பதவிகளில் இருந்தும் விலகினார்.

என்விடியாவின் வீழ்ச்சி.. ஏஎம்டி, பிராட்காம் நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்.. ரூட்டை மாற்றிய முதலீட்டாளர்கள்..!!

இதன் மூலம் நேற்று அமெரிக்கப் பங்குச்சந்தையில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டது என்றால் மிகையில்லை. என்விடியா பங்குகள் 4.34 சதவீதம் சரிந்த நிலையில் சக போட்டி நிறுவனங்களான ஏஎம்டி, பிராட்காம் போன்றவை 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் முதலீட்டாளர்கள் என்விடியா நிறுவனத்தைக் கைவிட்டாலும், ஏஐ துறையைக் கைவிடுவதாக இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதேவேளையில் ஏஐ முதலீட்டாளர்கள் மத்தியில் இத்துறை சார்ந்த பங்குகள் விலை குறைந்தாலும் Buy on Dips கொள்கை கீழ் தொடர்ந்து வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கும் காரணத்தால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் என்விடியா பங்குகள் உயர்வுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

நேற்றைய மேசமான சரிவில் இருந்து மீண்டது மூலம் என்விடியாவின் சந்தை மதிப்பு மீண்டும் 4 டிரில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது, இதன் பலமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வார வர்த்தகத்தைப் பார்க்கும் போது என்விடியா பங்குகள் 11 சதவீதம் சரிந்தாலும், ஏஎம்டி 30 சதவீதமும், பிராட்காம் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் என்விடியா மட்டுமே வைத்திருந்த ஆதிக்கம் தற்போது மற்ற நிறுவனங்கள் மத்தியில் பகிர்ந்துள்ளது.

இதேபோல் ஏஐ சிப் தயாரிக்கும் தைவான் செமிகண்டக்டர் நிறுவனம் இந்த வாரம் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனால் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஏஐ முட்டுக்கட்டை, என்விடியா வீழ்ச்சி ஆகியவற்றைக் கடந்து ஏஐ தொழில்நுட்பம் மீதும், இத்துறையின் மீதும் பெரும் நம்பிக்கை உருவாகியுள்ளது.

மேலும் செமிகண்டக்டர் துறையில் ஆராய்ச்சி நிறுவனமான செமிஅனலிசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிலன் பட்டேல் கூறுகையில், ஜென்சன் ஹுவாங்-ன் ராஜினாமா ஏஐ சப்ளை செயின் பிரிவில் போட்டித்தன்மையை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

இதேவேளையில் ஐபிஎம் நிறுவனம் ஏஐ பணிகளை ஹைப்ரிட் குவான்டம் கிளாசிங் கம்பியூட்டிங் மற்றும் குவாண்டம் மெஷின் லேர்னிங் முறையில் ஏஐ பணிகளைச் செய்யக்கூடிய IBM Quantum Nighthawk r3 சிப்-ஐ 2 நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்துள்ளது.

இதேபோல் ஓப்பன்சோர்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தை மொத்தமாக முடக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகியிருக்கும் காரணத்தால் அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஏஐ நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+