அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்கனவே ஏஐ பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துக்கொண்டு இருக்கும், ஏஐ தொழில்நுட்பத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், சீன பெண் உளவாளியான ஆலீஸ் ஹூவாங் கடந்த 2 வருடங்களாகத் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்து.
இந்த குற்றத்தை ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டது மட்டும் அல்லாமல் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் நிறுவனத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜென்சன் ஹுவாங் வெளிப்படையாகத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து Nvidia விசாரணையைத் துவங்க உள்ளது, இந்த விசாரணை மூலம் ஆலீஸ் ஹூவாங் தலைமை வகிக்கும் மெகாஸ்பீட் நிறுவனத்திற்கும், ஆலீஸ் ஹூவாங் மூலம் நடைபெற்ற அலிபாபா உடனான வர்த்தகத்தில் எத்தகைய தகவல்கள் திருடப்படு உள்ளது, வர்த்தக விதிமீற்கள், அமெரிக்கக் கட்டுப்பாட்டைத் தாண்டி என்விடியா சிப், தொழில்நுட்பம் சீன நிறுவன கைகளுக்குச் சென்றதா எனப் பல கோணத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
இதன் எதிரொலியாக வாரத்தின் முதல் நாளான இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தை திறந்த உடன் Nvidia பங்குகள் பெரும் சரிவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நினைத்துப் போலவே நடந்தது.

இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே என்விடியா பங்குகள் 8 சதவீதம் வரையில் சரிந்து ஒரு பங்கு விலை 171.80 டாலர் வரையில் சரிந்துள்ளது. ஆனால் சில மணிநேரத்தில் என்விடியா நிர்வாகத்தின் ஜென்சன் ஹுவாங் மீதான விசாரணையைத் தாண்டி என்விடியா தொழில்நுட்பம், அதன் அவசியத்தை நம்பி முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்ததன் விளைவாக தற்போது 3.5 சதவீத சரிவுடன் 179.59 டாலரில் வர்த்தகமாகி வருகிறது.
Alice Huang-ன் அடையாளம் 2023ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூர் நாட்டின் Megaspeed International உடன் தொடர்புடையது. Alice Huang-ன் மற்றொரு பெயர் Huang Le. ஜூன் 2024ஆம் ஆண்டு முதன் முதலில் ஜென்சன் ஹூவாங் உடந் தைவான் தலைநகர் தைபே-வில் ஒரு ஹோட்டல் விருந்தில் இருவரும் அருகில் அமர்ந்து விஸ்கி குடித்துக்கொண்டு இருந்த புகைப்படம் முதல் முதலில் வெளியானது. அப்போதே யார் இந்த ஆலீஸ் ஹுவாங் என்ற கேள்வி எழுந்தது.

இதன் பின்பு மே 2025ஆம் தைபே-வில் நடந்த Computex technology exhibition-ல் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர், தோள்களில் கைகளைப் போட்டது, கன்னத்தில் முத்தம் கொடுத்தது, Alice Huang-ன் பின்புறத்தில் ஜென்சன் கை வைத்தது என மிகவும் நெருக்கமாகக் காணப்பட்டனர். இதன் பின்பு அன்று இரவு ஒரே காரில் சென்றனர் என AFP தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் இந்த ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி, நியூயார்க் டைம்ஸ் ஆலீஸ் ஹுவாங் - ஜென்சன் ஹுவாங் குறித்த தொடர்பு குறித்தும், அவர் ஒரு சீன உளவாளி என்றும், அமெரிக்காவின் ஏஐ சிப் மீதான கட்டுப்பாட்டைக் களைந்து சீனாவுக்கு என்விடியா சிப்களை கொண்டு செல்ல ஆலீஸ் உதவியது குறித்த தகவலை வெளியிட்டது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 2025ஆம் ஆண்டிலேயே டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளை எச்சரிக்கும் வகையில் ஆலீஸ் ஹுவாங் - ஜென்சன் ஹுவாங் தொடர்பு குறித்த ஒரு மெமோ வெளியாகியுள்ளது.
இதை அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ பார்த்துள்ளார். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்பு இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மெமோ-வில் ஆலீஸ் ஹுவாங் சீன உளவாளி தான் என்றும், சீன பாதுகாப்புத் துறையால் தேர்வு செய்யப்பட்ட நபர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications