உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக திகழும் ஏஐ சிப் நிறுவனமான என்விடியா சமீபத்தில் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. இதன் மதிப்பீடுகள் சமீபகாலமாக அதிக ஏற்றத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்தில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் ஜியோ உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் கூட்டணியை அறிவித்தது.
இதற்கிடையில், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரியான ஜென்சன் ஹுவாங், இந்த உயர்விலும் கூட ஒரு கைக்கடிகாரம் கூட அணியாமல் இருக்கிறார். இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். அவர் ஏன் கைக்கடிகாரம் அணிவதில்லை? நேரம் குறித்த அவரது நிலைப்பாடு என்ன? என்பதை பார்க்கலாம்.

என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் தனித்துவமான தத்துவத்தைக் கொண்டுள்ளார். அவர் ஏன் கடிகாரத்தை அணியவில்லை என்பது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு தொழில்நுட்ப நிகழ்வில் பேசிய ஹுவாங், அவரின் AI சிப் நிறுவனமான என்விடியா சமீபத்திய ஆண்டுகளில் அதன் மதிப்பீடு உயர்ந்து வருவது குறித்து பேசினார்.
அப்போது வாட்ச் அணியாதது குறித்து பேசிய ஜென்சன் ஹுவாங், மிகச் சிலருக்கு இது தெரியும் நான் கடிகாரம் அணிய விரும்புவதில்லை. கடிகாரம் அணியாததற்குக் காரணம் தனக்கு மிக முக்கியமான நேரம் உள்ளது என்றும், தான் லட்சியம் வைக்கத்திருக்கவில்லை எனவே, அதிகம் செய்ய ஆசைப்படவில்லை. தற்போது செய்து வருவதை சிறப்பாக செய்ய ஆசைப்படுகிறேன். நான் இன்னும் இலக்கை அடையவில்லை. உலகம் என்னிடம் வரும் வரை நான் காத்திருக்கிறேன். என்னை அறிந்தவர்களுக்கும் என்விடியா நீண்ட கால உத்திகள் ஏதும் கொண்டிருக்கவில்லை என்பது தெரியும். எங்களிடம் நீண்ட கால திட்டம் எதுவும் இல்லை. நீண்ட கால திட்டத்திற்கான வரையறை என்னவென்றால், இன்று நாம் என்ன செய்கிறோம் அதுமட்டும் தான் என்று அவர் கூறியுள்ளார்.
சிறந்த தொழில் ஆலோசனை: Now is most important: ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில், ஹுவாங் ஜப்பானிய தோட்டக்காரருடன் நடந்த உரையாடல் குறித்து தெரிவித்துள்ளார். ஜப்பான் கியோட்டோவில் ஒரு கோவிலை கவனித்து வந்த தோட்டக்காரரை சந்தித்ததாகவும், அப்போது, கோடை வெப்ப நேரத்தில், தோட்டத்தில் சிறிய அளவிலான கருவிகள் இருந்தபோதிலும், பாசி படர்ந்த இடத்தை சிறப்பான நிலையில் வைத்திருந்த தோட்டக்காரர் பற்றி பகிர்ந்து கொண்டார். அவரிடம் ஹுவாங், இதை எப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது, தோட்டக்காரர் ஹுவாங்கிடம் ஆங்கிலத்தில் எனக்கு நிறைய நேரம் இருக்கிறது என்று கூறியதாக தெரிவித்தார்.
எனவே, இதுதான் நான் வழங்கக்கூடிய சிறந்த தொழில் ஆலோசனை என்றும், இந்த நேரம் மிக முக்கியமான என்றும், இதை நீங்கள் முடிவெடுங்கள் நான் அரிதாகவே விஷயங்களைத் தேடுகிறேன். நான் இப்போது கவனம் செலுத்துகிறேன். நான் என் வேலையை அனுபவித்து செய்து வருகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
சமூக ஊடகங்களில் உத்வேகம்: NVIDIA இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங், அவரும் அவரது நிறுவனமும் நிகழ்காலத்தில் எவ்வாறு கவனம் செலுத்தும் என்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது அவர்களின் எதிர்காலத்தை எப்படி வடிவமைக்கிறது என்று காட்டுகிறது. இன்ஸ்டாகிராம் கணக்கு தொழில்முனைவோர் ஒரு நிகழ்வில் ஹுவாங் பேசும் வீடியோவை வெளியிட்டார், அங்கு அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதிகம் செய்வது எளிது குறைவாக செய்வது கடினம் என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications