பிரபல ஃபேஷன் ஹஃப் தளமான நைகா நிறுவனத்தில் இருந்து, முக்கிய பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்த 5 சீனியர் நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
நைகாவின் SuperStore CEO, தலைமை வணிக அதிகாரி உட்பட Nykaa இன் ஐந்து மூத்த நிர்வாகிகள், 2023 ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்வது பெரிய விஷயமில்லை, ஆனால் அடுத்தடுத்து 3 மாதத்தில் 5 அதிகாரிகள் வெளியேறுவது, அதிலும் முக்கியமாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே உள்ளது.
சமீபத்தில் சோமேட்டோ நிறுவனத்தில் மூத்த அதிகாரிகள், இணை நிறுவனர் பதவிகளில் இருப்பவர்கள் வெளியேறினர்.
ராஜினாமா செய்த அதிகாரிகள்!
நைகா நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தவர்களில் Nykaa SuperStore CEO விகாஸ் குப்தா, Nykaa Fashion தலைமை வணிக அதிகாரி கோபால் அஸ்தானா, தலைமை வணிக நடவடிக்கை அதிகாரி மனோஜ் காந்தி, வணிகத் தலைவர் Shuchi Pandya மற்றும் நிதித் தலைவர் லலித் ப்ருதி ஆகியோர் அடங்குவர்.
ராஜினாமா-வுக்கான காரணம்!
5 அதிகாரிகள் ராஜினாமா செய்ததற்கான காரணம் எதுவும் அறியப்படாத நிலையில் நைகாவின் நிதித் தலைவராக இருந்த லலித் ப்ருதி அவர்கள் தற்போது edtech நிறுவனமான UNIVO இல் தலைமை நிதி அதிகாரியாக சேர்ந்துள்ளார்.
நைகா விளக்கம்
இந்த ராஜினாமா குறித்து நைகாவிடம் கேட்டபோது அது அவர்களின் சொந்த முடிவின் அடிப்படையிலேயே வெளியேறியதாகக் கூறியுள்ளது.
மேலும் சிலர் வருடாந்திர மதிப்பீடு மற்றும் அவர்களின் வேலைத்திறன் அடிப்படையில் வெளியேற்றங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பொதுவாக நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும், அதன் அடிப்படையிலும் இது நிகழ்ந்துள்ளது என நைகா நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
அரவிந்த் அகர்வால்
இவர்கள் 5 பேருக்கு முன்பு 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நைகா நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான அரவிந்த் அகர்வால் நைகா நிறுவனத்தை விட்டு வெளியேறி PayU நிறுவனத்தில் சேர்ந்தார். இவருடன் சேர்த்தால் மொத்தம் 6 பேர் நைகா நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
குறுகிய காலம்
Nykaa விலிருந்து வெளியேறிய நிர்வாகிகள் 1 முதல் 3.5 ஆண்டுகள் வரை நிறுவனத்தில் ஒரு குறுகிய காலத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் Shuchi Pandya தனது ஆன்லைன் நகை நிறுவனமான Pipa.Bella ஐ கையகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜனவரி 2021 இல் Nykaa ஃபேஷனில் சேர்ந்தார். அவர் நைகாவில் சேர்ந்த நேரத்தில் இரண்டு ஆண்டுகளில் பிபா.பெல்லாவில் ₹ 100 கோடி வர்த்தகத்தை கடக்க இலக்கு நிர்ணயித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து அஸ்தானா Nykaa இல் 3 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
பங்குகள் விலை வீழ்ச்சி!
மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் நைகா நிறுவனத்தின் பங்குகள், மற்ற புதிய-வயது நிறுவனங்களைப் போலவே, கடந்த சில மாதங்களாக பங்குச்சந்தைகளில் கடும் சரிவை எதிர்கொண்டுவரும் நேரத்தில் இந்த மூத்த வெளியேற்றங்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 16 அன்று நைகா போனஸ் பங்குகளை வழங்கியதில் இருந்து அதன் பங்கு விலை கிட்டத்தட்ட 28% வரை குறைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications