நைகா கொடுத்த சூப்பர் அப்டேட்.. 1:5 விகிதத்தில் போனஸ்.. உங்கள் வசம் இருக்கா?

நய்கா (Nykaa) நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் பதிவு தேதியில் ஒவ்வொரு பங்குக்கும் 5 பங்குகள் போனஸை வழங்கவுள்ளது.

இதற்கிடையில் இன்று இந்த பங்கு விலையானது இன்று 2% மேலாக முடிவடைந்துள்ளது.

இன்றைய பங்கு நிலவரம்?

இன்றைய பங்கு நிலவரம்?

என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 2.52% அதிகரித்து, 1304.20 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 1414 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1275 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 2.44% அதிகரித்து, 1304.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 1411.80 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1273.80 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2574 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 1125 ரூபாயாகவும் உள்ளது.

ரெக்கார்டு தேதி

ரெக்கார்டு தேதி

நய்கா நிறுவனத்தின் போனஸ் குறித்தான இந்த முடிவானது இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில் இன்று இறுதியாகியுள்ளது. நவம்பர் 03, 2022 ரெக்கார்டு தேதியாக அறிவித்துள்ளது. இந்த பங்குகள் டிசம்பர் 02, 2022ல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நய்கா நிறுவனம்

நய்கா நிறுவனம்

இதனால் குறித்தான இறுதி அறிவிப்பானது விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நய்கா நிறுவனம் கடந்த 2012ல் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு 2015ல் இருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்து வருகின்றது. இன்றும் ஆன்லைனில் வணிகத்தில் நல்ல லாபகரமான நிறுவனமான செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப்களில் நய்காவும் ஒன்று.

பங்கு சந்தையில் நுழைவு

பங்கு சந்தையில் நுழைவு

பேஷன் நிறுவனமான இது கடந்த ஆண்டின் இறுதியில் தான் பங்கு சந்தையில் நுழைந்து, பொது நிறுவனமாகவும் மாறியது. இந்த நிறுவனத்தின் போர்ட்போலியோவில் நல்ல முன்னணி பிராண்டுகள், குறிப்பாக உள்நாட்டு முன்னணி பிராண்டுகள், வெளிநாட்டு பிராண்டுகள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.

மக்களை கவரும் வெளி நாட்டு பிராண்டுகள்

மக்களை கவரும் வெளி நாட்டு பிராண்டுகள்

இதில் பேஷன், காஸ்மெடிக்ஸ், நேச்சுரல் புராடக்ஸ் உள்ளிட்ட பல பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றது. குறிப்பாக நய்கா பெயரில் சொந்தமான உற்பத்தி செய்தும் விற்பனை செய்து வருகின்றது. சமீபத்திய நிலவரப்படி நய்காவின் போர்ட்போலியோவில் சுமார் 2600-க்கும் மேற்பட்ட வெளி நாட்டு பிராண்டுகள் இடம் பெற்றுள்ளன.

பங்கு வரலாறு

பங்கு வரலாறு

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நய்கா நிறுவனத்தின் பங்கு விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 35% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே இந்த பங்கு பட்டியலிடப்பட்டதில் இருந்து 43% சரிவினைக் கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+