நைகா கொடுத்த செம அப்டேட்.. 344% வளர்ச்சி.. முதலீட்டாளர்கள் செம்ம ஹேப்பி..ஏன் தெரியுமா?

இந்தியாவின் முன்னனி பேஷன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளரான நய்கா நிறுவனம் அதன் செப்டம்பர் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.

இது முதலீட்டாளர்களும், பங்கு தாரர்களும் எதிர்பார்த்ததை போலவே இந்த நிறுவனம் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.

கடந்த ஆண்டினை காட்டிலும் 344% நிகரலாபம் அதிகரித்து, 5.2 கோடி ரூபாயாக செப்டம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது.

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

இதன் வருவாய் விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 39% அதிகரித்து, 1230 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் வரிக்கு முந்தைய லாபம் 542% அதிகரித்து, 8.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் ஒருங்கிணைந்த மொத்த விற்பனை (GMV) கடந்த ஆண்டினை காட்டிலும் 45% அதிகரித்து, 2345 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மார்ஜின் வரம்பு

மார்ஜின் வரம்பு

அதன் மொத்த மார்ஜின் வரம்பானது கடந்த ஆண்டில் 42.7% ஆக இருந்த நிலையில், அது தற்போது 45.3% ஆக உயர்ந்துள்ளது.

இதே இதன் எபிட்டா விகிதம் 112 அதிகரித்து, 61 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் எபிட்டா மார்ஜின் 5% மேம்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 3.3% ஆக இருந்தது.

பிரிவு வாரியாக விற்பனை

பிரிவு வாரியாக விற்பனை

அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவில் மொத்த விற்பனயானது 39% அதிகரித்து, 1630 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே ஆர்டர்கள் 39% அதிகரித்து, 8.4 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதே பேஷன் பிரிவில் 43% விற்பனை அதிகரித்து, 599 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வலுவான வளர்ச்சி

வலுவான வளர்ச்சி

நிறுவனத்தின் செயல் திறன் குறித்து பேசிய நய்காவின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பல்குனி நாயர், எங்கள் வணிகம் நல்ல வலுவான வளர்ச்சியினை காட்டியுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டுமே வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது எங்களின் மார்ஜின் மேம்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

கொரோனாவுக்கு பிறகு புதிய ஸ்டோர்கள் மற்றும் புதிய முதலீடுகளை செய்து வருகின்றோம். இது எங்கள் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகின்றது. இது விற்பனையை அதிகரிக்கவும் உதவியது. அழகு, பர்சனல் கேர் மற்றும் ஆரோக்கியத்திற்கான நுகர்வோர் பொருட்கள் என பலவற்றின் தேவையானது அதிகரித்துள்ளது. இப்பிரிவில் நுகர்வும் அதிகரித்து வருகின்றது.

கவனம்

கவனம்

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நல்ல ஆரோக்கியமான அறிகுறி காணப்படுகின்றது.

தொடர்ந்து சர்வதேச பிராண்டுகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், எதிர்கால வளர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப முதலீடு செய்து வருவதாகவும் நாயர் தெரிவித்துள்ளார்.

இன்றைய பங்கு விலை நிலவரம்

இன்றைய பங்கு விலை நிலவரம்

நய்காவின் பங்கு விலையானது, என்எஸ்இ-யில் 2.83% அதிகரித்து, 1185.40 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது, 2.44% அதிகரித்து, 1185.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2574 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 975.50 ரூபாயாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+