இந்திய வர்த்தகச் சந்தையிலும், பங்குச்சந்தையிலும் கலக்கி வரும் நைகா நிறுவனம் தனது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்து வரும் இதே நிலையில் வெளிநாட்டில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது நைகா.
நைகா நிறுவனம்
இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நைகா நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் துபாய் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு வளைகுடா நாடுகள் முழுவதும் லைப்ஸ்டைஸல் மற்றும் பேஷன் துறை நிறுவனமான Apparel Group உடன் நைகா ஒப்பந்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகள்
இந்த ஒப்பந்தம் மூலம் நைகாவின் வர்த்தகம் தற்போது துபாய் மட்டும் அல்லாமல் வளைகுடா நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதற்காகத் தனிப்பட்ட நிறுவனத்தை உருவாக்கப்பட்டு இருக்கும் நிலையில் இக்கூட்டணி நிறுவனத்தில் நைகா 55 சதவீத பங்குகளையும், Apparel Group 45 சதவீத பங்குகளையும் பெற உள்ளது.
நைகா ஈகாமர்ஸ்
இந்திய சந்தையில் 10 வருடமாக இயங்கி வரும் நைகா ஈகாமர்ஸ் மூலம் இந்தியாவில் பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களை மக்களின் கைகளுக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளது. நைகாவின் வெற்றி பல நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதுவரை பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் விற்பனை சந்தையில் யாரும் செய்ய முடியாததை நைகா செய்துள்ளது.
பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள்
பொதுவாகப் பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் விற்பனையில் தனித்தனி பிராண்டுகளுக்குத் தனித்தனி வர்த்தகத் தளம் மட்டுமே இருக்கும், ஆனால் நைகா வருகைக்குப் பின்பு உள்நாட்டு பிராண்டு பொருட்கள் முதல் வெளிநாட்டு பிராண்டு பொருட்கள் வரையில் ஓரே இடத்தில் அளிக்கும் வர்த்தகத் தளத்தை உருவாக்கியுள்ளது.
2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்கள்
இதன் மூலம் அனைத்து தரப்பினரும், தங்களுக்குத் தேவையான பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களை வாங்க முக்கியத் தேர்வா நைகா விளங்குகிறது. இதேபோல் நைகா வருகைக்குப் பின்பு இந்தியாவில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது, எல்லாம் ஈகாமர்ஸ் பவர்.
Apparel Group இந்தியா
இதேவேளையில் Apparel Group இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வதோதரா, இந்தூர், கொச்சி, திருவனந்தபுரம், அமிர்தசரஸ் மற்றும் லூதியானா ஆகிய பகுதிகளைத் தேர்வு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications