இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான IT மற்றும் டெக் ஊழியர்கள் அமெரிக்காவில் வேலை என்ற வாழ்நாள் கனவை நினைவாக்க, H-1B விசா லாட்டரி மட்டுமே நம்பி காத்திருக்கின்றனர். H1B விசாவில் உங்களுக்கான வெற்றி வாய்ப்பு வெறும் 37% என்பது தெரியுமா..? ஆனால், 93% வெற்றி வாய்ப்புடன் அமெரிக்காவில் ஜாலியாக வேலை செய்ய O-1A விசா என்ற ஒரு ஜாக்பாட் இருப்பது பலருக்கும் தெரிவது இல்லை.
அமெரிக்காவில் தொழில் வாய்ப்புகளையும், வேலைவாய்ப்புகளையும் தேடும் இந்தியர்களுக்கு O-1A விசா ஒரு முக்கியமான பாதையாக உருவெடுத்துள்ளது. அதுவும் டிரம்ப் வந்த பின்பு கோல்டு கார்டு, விசா கட்டுப்பாடு என பல நெருக்கடி வந்த பின்பு O-1A விசா உண்மையில் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளது.

இந்த விசா யாருக்கெல்லாம் கிடைக்கும் என்றால்.. அறிவியல், கல்வி, வணிகம் மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்த மற்றும் அதீத திறமை கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. H-1B விசா போல் இல்லாமல் விண்ணப்பம் செய்யும் 93% பேருக்கு இந்த விசா கிடைத்து வருகிறது.
இந்த செய்தியில் O-1A விசாவின் முக்கியத்துவம், இந்தியர்களுக்கும், குறிப்பாக ஐடி மற்றும் டெக் ஊழியர்களுக்கு இதன் பயன்களை முழுமையாகவும், எளிமையாகவும் விளக்குகிறது.
O-1A விசா என்பது குறிப்பிட்ட சில துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அமெரிக்காவில் வாழவும் பணியாற்றவும் அனுமதிக்கிறது. இந்த விசா பெற ஒரு நிறுவனத்தின் ஆதரவோ, குறிப்பிட்ட கல்வித் தகுதியோ அல்லது குறைந்தபட்ச ஊதியம் போன்ற எந்தவிதமான தேவையும் இல்லை என்பது தான் இந்த விசாவுக்கான தனி சிறப்பு.
இதற்கு மாறாக, இந்த விசா-வை சட்டென பெற வேண்டும் என்றால் நீங்கள் சர்வதேச அளவில் விருதுகள், ஊடகத்தில் பாராட்டுகள், ஆராய்ச்சியில் சாதனைகள், கண்டுப்பிடிப்புகள் மற்றும் சர்வதேச மாநாட்டில் பங்களிப்புகள் ஆகியவற்றை பெற்று இருந்தால் சிறப்பு தகுதியாக ஏற்கப்படும்.
இந்த விசா ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பலருக்கும் அறிவியல், கல்வி, வணிகம் மற்றும் விளையாட்டு துறைகளில் அதீத திறமை கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த விசாவின் ஆரம்ப கால அளவு என்பது மூன்று ஆண்டுகளாகும், இதன் பின்னர் விண்ணப்பதாரர் தொடர்ந்து இத்துறையில் பணியாற்றி, உரிய திறனை வெளிப்படுத்தினால் ஒவ்வொரு ஆண்டும் இந்த விசா நீட்டிக்கப்படலாம்.
இந்த விசா பெற செலவு சுமார் 25 லட்சம் ரூபாயாகும். இத்தொகை அதிகமாக இருந்தாலும் விண்ணப்பம் செய்யும் பெரும்பாலானோருக்கு கிடைக்கும் காரணத்தால் இது திறமையானவர்களுக்கு ஜாக்பாட் ஆக விளங்குகிறது.
O-1A விசா பயன்கள்:
- முதலாவதாக, H-1B விசாவின் லாட்டரி முறையைத் தவிர்த்து, திறமையான இந்தியர்கள் தங்கள் சாதனைகளையும், திறன்களை முன்வைத்து அமெரிக்காவில் வேலைவாய்ப்பைப் பெறலாம். இது அமெரிக்காவில் பணியாற்றவும், நீண்டகால தொழில் வளர்ச்சியை உருவாக்கவும் உதவுகிறது.
- இரண்டாவதாக, O-1A விசா EB-1A பாதையைப் பயன்படுத்தி அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கு விரைவான வழியை வழங்குகிறது தனி சிறப்பு.
- மூன்றாவதாக, இந்த விசா ஒரு நிறுவனத்தை நம்பி இல்லாமல் தனித்து பணியாற்ற விரும்பும் தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாபெரும் சதந்திரத்தை அளிக்கிறது.
திறமையான இந்தியர்கள் தங்கள் துறையில் பெரும் சாதனைகளை செய்ய அமெரிக்காவுக்கான கதவுகளை திறக்கிறது இந்த O-1A விசா. உதாரணமாக அமெரிக்காவில் ஒரு ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்க வேண்டும், இதற்கான வெற்றி வாய்ப்புகளையும், சரியாக கூட்டாளியை தேட வேண்டும் என்பவர்களுக்கு சிறிய காலம் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற இந்த O-1A விசா ஆபத்பாந்தவனாக இருக்கும்.
இந்திய IT மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு இந்த விசா குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை உருவாக்குகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆராய்ச்சி துறைகளில் திறமையானவர்களுக்கு இது ஜாக்பாட் ஆக விளங்கும். அமெரிக்காவில் தொழில் தொடங்கவோ அல்லது புதிய திட்டங்களில் பணியாற்றவோ இது வழிவகுக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications