சென்னை: வாரிசு சான்றிதழ் வாங்குவது, பட்டாவில் திருத்தம் செய்வது போன்ற வேலைகள் எல்லாம் அத்தனை எளிதில் முடியும் காரியமல்ல. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். ஆனால் மக்கள் இனி இவ்வாறு அலைய தேவையில்லை.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: தமிழ்நாடு அரசு சார்பாக மாநிலம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்கள் அன்றாடம் அணுகக் கூடிய அரசு சேவைகளும் திட்டங்களும் அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது தான் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டம். வரும் நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த திட்ட முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரே இடத்தில் 46 அரசு சேவைகள்:பெரும்பாலான அரசு சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இ உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 46 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன . இதில் பட்டா திருத்தம் மற்றும் வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவது போன்ற சேவைகளையும் பெறலாம்.
பட்டா மாற்றம் முதல் வாரிசு சான்றிதழ் வரை: பட்டாவில் பெயர் மாற்றம் அல்லது திருத்தம் , வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் அதற்கு நாம் இ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் பின்னர் விஏஓ அலுவலகம் என சென்று அலைய வேண்டி இருக்கும். ஆனால் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்றால் போதும் இந்த துறை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அங்கே இருப்பார்கள் என்பதால் ஒரு நாளிலேயே இந்த வேலையை முடித்து விட முடியும்.

பட்டா திருத்தம்: பட்டாவில் பெயர் மற்றும் பரப்பு திருத்தம், பட்டா மாறுதல் செய்ய விரும்புபவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை ,அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று ,சொத்து குறித்த பத்திரங்கள் ,வில்லங்க சான்றிதழ் ,இறப்பு அல்லது வாரிசு சான்றிதழ், வீட்டு மனை வரைபடம் ஆகிய ஆவணங்களோடு உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்றால் நேரடியாக பட்டா மாறுதல் பெறுவதற்கு விண்ணப்பம் செய்து கொள்ள முடியும். அதே போல பட்டாவில் பெயர் அல்லது பரப்பளவு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றாலும் இந்த முகாமில் விண்ணப்பம் செய்யலாம். அனைத்து துறை அதிகாரிகளும் இருப்பார்கள் என்பதால் உங்களுக்கு உடனடியாக வேலை முடிந்துவிடும்.
வாரிசு சான்றிதழ்: வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகங்கள் மிகச் சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. பொதுவாக இதற்காக நாம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்துவிட்டு சம்பந்தப்பட்டு அதிகாரிகள் அதனை சரிபார்த்து நமக்கு வாரிசு சான்று வழங்குவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் தேவைப்படும், கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டால் இன்னும் கூட கால தாமதம் ஆகும். ஆனால் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சென்று நேரடியாக விண்ணப்பம் செய்தால் விரைவிலேயே வாரிசு சான்றிதழ் கிடைத்துவிடும். இதற்கு இறந்த நபரின் இறப்புச் சான்றிதழ், இறந்த நபரின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் அனைத்து வாரிசுதாரர்களின் ஆதார் அட்டைகளை கொண்டு சென்று விண்ணப்பம் செய்யலாம்.
ஜாதி சான்றிதழ்: ஆதார் அட்டை, பிறப்புச் சான்று, பெற்றோர் அல்லது உடன் பிறந்தோரின் ஜாதி சான்று அல்லது கல்வி சான்று, குடும்ப அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு சென்று விண்ணப்பம் செய்யலாம். உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் விண்ணப்பம் செய்தால் விரைவிலேயே ஜாதி சான்றிதழ் கிடைத்துவிடுகிறதாம்.
இதே போல வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாகவே விண்ணப்பம் செய்யலாம் என அரசு தெரிவித்து இருக்கிறது. உங்கள் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் எங்கே நடக்கின்றன என்ற விவரத்தையும் https://ungaludanstalin.tn.gov.in/camp.php என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications