இந்தியாவில் அதிகளவில் வேலைவாய்ப்பு, உற்பத்தி, ஏற்றுமதியை உருவாக்கும் ஒரு துறை என்றால் அது ஆட்டோமொபைல் துறை தான். வருடம் முழுவதும் கார், பைக் உற்பத்தி மட்டும் அல்லாமல் உதிரிப்பாகங்கள் உற்பத்தி, விற்பனை, சர்வீசஸ் என ஆட்டோமொபைல் துறை சார்ந்த வர்த்தகம் தொடர்ந்து முழு வீச்சுடன் இயங்கி வருகிறது.
ஆனால் இந்த அக்டோபர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கார், பைக் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதற்கு மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டு உள்ள மாற்றமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
அக்டோபர் 2021 விற்பனை
கார் - 2.06 லட்சம்
பைக் - 13.25 லட்சம்
3 சக்கர வாகனம் - 65,359
வர்த்தக வாகனங்கள் - 55,079
டிராக்டர் - 60,531
கடந்த ஆண்டின் இதே அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் கார் விற்பனை 15.3 சதவீதமும், பைக் விற்பனை 23.2 சதவீதமும் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்குப் பல காரணங்கள் அடுக்கடுக்காக உள்ளது.
விலை உயர்வு
கார் மற்றும் பைக் உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் பல மாதங்களாகத் தேக்கி வைத்திருந்த விலை சுமை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த வருடம் அள்ளிவீசியுள்ளது.
இதன் வாயிலாக இந்தியாவில் பல முன்னணி நிறுவனம் 2021ல் விலையை ஒரு முறைக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் புதிய கார் மற்றும் பைக் வாங்குவதை ஒத்துவைத்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் பெரிய அளவிலான உயர்வைப் பதிவு செய்தது. இதனால் போக்குவரத்துச் செலவுகள் அதிகமான காரணத்தால் புதிய கார் மற்றும் பைக் வாங்குவதில் மக்கள் தயக்கம் காட்டினர்.
Work From Home
இன்னுமமும் பல துறையில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால் வாகனங்களுக்கான தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது. Work From Homeல் இருக்கும் ஊழியர்கள் வழக்கத்தை விடவும் அதிக மணிநேரம் வீட்டில் பணியாற்றும் காரணத்தால் வாகனங்கள் பயன்படுத்தும் அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதற்கிடையில் புதிய வாகனம் எதற்காக வாங்க வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது.
சிப் தட்டுப்பாடு
இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதும் ஆட்டோமொபைல் சிப் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாகக் கார் உற்பத்தி தடைபெற்று, விலை அதிகரித்துள்ளது. இதனால் புதிய கார்களை ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு டெலிவரி காலம் நீட்டிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை
இதேபோல் தீபாவளி பண்டிகையின் போது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தள்ளுபடி அளிக்கும் என்பதாலும் வாகனங்கள் விலை உயர்ந்துள்ள நேரத்திலும், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள வேளையிலும் புதிய கார், பைக் வாங்குவதை ஒத்திவைத்து விட்டு தீபாவளி பண்டிகை காலத் தள்ளுபடியில் வாங்கலாம் என மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications