செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் சில முக்கிய மாற்றங்கள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. LPG சிலிண்டர் விலைகள் முதல் PPF கணக்கு விதிகளில் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் உட்பட, நாட்டு குடிமக்களின் பாக்கெட்டுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதித் திட்டமிடல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த மாற்றங்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அக்டோபரில் இருந்து எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்களின் விவரம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
LPG சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களில் ஒன்று எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம். கமெர்சியல் சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலைகள் பெரும்பாலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. கடந்த மாதம், கமெர்சியல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாதமும் கூடுதலான விலை மாற்றம் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வீடுகள் மற்றும் வணிகங்களை பாதிக்கும் வாய்ப்புள்ளது.

PPF கணக்குகளுக்கான புதிய விதிகள்: ஒழுங்கற்ற முறையில் திறக்கப்படும் சிறுசேமிப்பு கணக்குகளை சரி செய்யும் பொருட்டு அரசாங்கம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. NRI கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைப் புதுப்பிக்கத் தவறினால், அவர்கள் தங்கள் PPF இருப்புக்கான வட்டியைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள்.
சிறுவர்களின் பெயரில் PPF கணக்கு தொடங்கப்பட்டிருந்தால்.. அவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட் வட்டி விகிதங்களே பொருந்தும். குழந்தை 18 வயதை அடைந்த பிறகு அவை PPF கணக்காக மாற்றப்படும். 18 வயதிற்கு பிறகு தான் PPF திட்டத்தின் முதிர்வு காலம் கணக்கிடப்படும். கூடுதலாக, ஒரு நபர் பல PPF கணக்குகளை வைத்திருந்தால், திட்டத்தின் வட்டி விகிதம் முதன்மைக் கணக்கிற்கு மட்டுமே பொருந்தும்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்குகளுக்கான புதிய விதிகள்: பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டத்திலும் மாற்றங்கள் வருகின்றன. அக்டோபர் 1 முதல், இந்தக் கணக்குகளை நிர்வகிக்க சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அல்லது இயற்கைப் பெற்றோர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சட்டப்பூர்வ பாதுகாவலர்களைப் பட்டியலிடாமல் தாத்தா பாட்டி SSY கணக்கைத் திறந்திருந்தால், அந்தக் கணக்கு குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான் புதிய விதிமுறை.
ஐசிஐசிஐ பேங்க் டெபிட் கார்டு மாற்றங்கள்: ஐசிஐசிஐ வங்கியின் இணையதளத்தின்படி, அக்டோபர் 01, 2024 முதல், ஐசிஐசிஐ பேங்க் டெபிட் கார்டு மூலம் ரூ.10,000 செலவழித்து 2 இலவச விமான நிலைய லவுஞ்ச் அணுகலை அனுபவிக்கலாம். இந்த சலுகை ஒரு காலாண்டில் செய்யப்படும் செலவுகள், அடுத்த காலாண்டில் வழங்கப்படும். அக்டோபர், நவம்பர், டிசம்பர், 2024 காலாண்டில் இலவச லவுஞ்ச் அணுகலுக்குத் தகுதிபெற, நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், 2024 காலாண்டில் செலவு செய்ய வேண்டும்.
More From GoodReturns

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications