இயற்கை எரிவாயு விலை சர்வதேச சந்தையில் 40 சதவீதம் வரை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும், 15-ம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அப்படி இந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
19 கிலோ சிலிண்டர்
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2009.50 ரூபாய்க்காக விற்பனையாகி வருகிறது. டெல்லியில் 1859.50 ரூபாயும், கொல்கத்தா 1959 ரூபாயும், மும்பையில் 1811.550 ரூபாயாகவும் 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்ளது.
மானியம் இல்லா 14.2 கிலோ சிலிண்டர் விலை
மானியம் இல்லா 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை சென்னையில் 1068.50 ரூபாய்க்கும், செல்லியில் 1053 ரூபாய்க்கும், அதிகபட்சமாகக் கொல்கத்தாவில் 1079 ரூபாய்க்கும், மும்பையில் 1052 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த விலை ஜூலை மாதம் முதல் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
ரூபாய் மதிப்பு
சமையல் எரிவாயு விலை மாற்றத்தில் ரூபாய் மதிப்பு பெரும் பங்கு வகிக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து 81 ரூபாய் 64 காசுகளாக உள்ளது. இப்படியே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் மீண்டும் சமையல் எரிவாயு விலை உயரும். எனவே இப்போதைக்கு மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைய வாய்ப்பில்லை.
இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இறக்குமதி சம விலை (IPP) எனப்படும் சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. சவுதி அராம்கோவிலிருந்து இந்தியா தனது பெரும்பாலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால் ஐபிபி ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறது. எனவே, எல்பிஜி விலையை நிர்ணயிப்பதில் கச்சா எண்ணெய் விலை முக்கிய பங்கு வகிக்கிறது.
வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சரிவு.. உங்கள் ஊரில் வீட்டு ஊபயோக சிலிண்டர் விலை என்ன? | October Month Commercial Cooking Gas Cylinder Prices Slashed
இயற்கை எரிவாயு விலை சர்வதேச சந்தையில் 40 சதவீதம் வரை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வணிக பயன்பாட்டுக்கான சமயல் எரிவாயு சிலிண்டர் விலையும், 15-ம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் முதல் நாளம் இன்று வணிக பயன்பாட்டுச் சமையல் எரிவாயு சி
More From GoodReturns

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications