தினசரி கூலித் தொழிலாளி.. ரூ.1.47 கோடி பரிவர்த்தனை.. ரூ.2.59 லட்சம் வரி.. ஐடி துறை நோட்டீஸ்..!

புவனேஷ்வர்: ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி தான் சனாதரா காந்த்.

இவரின் வங்கிக் கணக்கில் 1.47 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தினசரி கூலித்தொழியான சனாதரா காந்த், தான் அடிப்படையில் ஒரு கூலித் தொழிலாளி என்றும், தனது வங்கிக் கணக்கில் 1.47 கோடி ரூபாய் பணபரிவர்த்தனை செய்துள்ளதாக நோட்டீஸ் வந்துள்ளது கண்டு பெரும் அதிர்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வருமான வரி

வருமான வரி

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில் சனாதரா காந்த் 1.47 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்ததற்காக 2.57 லட்சம் ரூபாய் வருமான வரி செலுத்துமாறு கேட்டு புர்ஜரிபரண்டி கிராமத்தில் வசிக்கும் இவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சனாதரா காந்த் தான் ஒரு ஒரு தினசரி கூலித் தொழிலாளி என்றும் கூறியுள்ளார்.

வரி செலுத்த வேண்டும்

வரி செலுத்த வேண்டும்

இது குறித்து சனாதரா காந்த் தனது கருத்தினை கூறுகையில், வருமான வரித்துறையில் இருந்து எனக்கு ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் 2.59 லட்சம் ரூபாய் வரி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. நான் ஒரு கூலித் தொழிலாளி. நான் எப்படி வரித் தொகையை செலுத்த முடியும் என்றும் சனாதரா காந்த் தெரிவித்துள்ளார்.

தனது முதலாளி தான் காரணம்

தனது முதலாளி தான் காரணம்

இந்த வருமான வரி நோட்டீஸானது 2014 - 2015ம் மதிப்பீட்டு ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பலமான பரிவர்த்தனைக்கு பின்னால் தனது முதலாளி இருப்பதாகவும் சனாதரா காந்த் குற்றம் சாட்டியுள்ளார். தனது முதலாளியான பப்பு அகர்வால் தனது கிராமத்தைச் சேர்ந்தவர். தனது கையொப்பத்தை ஒரு வெற்று காகிதம் மற்றும் நில பட்டாவில் எடுத்து ஏமாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

பப்பு அகர்வாலிடம் ஊழியர்

பப்பு அகர்வாலிடம் ஊழியர்

மேலும் சனாதரா காந்த் தான் பப்பு அகர்வாலிடம் ஏழு ஆண்டுகளாக ஊழியராகப் பணியாற்றியதாகவும் கூறியுள்ளார். அந்த நேரத்தில் நான் அவரிடத்தில் ஒப்படைத்த எனது நில பட்டாவை அவர் கேட்டார். அதை அவர் என்ன செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது தான் எனக்கு தெரிய வந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் செய்யப்பட்ட மிகப் பெரிய பரிமாற்றத்திற்கு தான் இந்த வருமான வரி நோட்டீஸ் என்றும் சனாதரா காந்த் தெரிவித்துள்ளார். ஆக மக்களே நமக்கு எப்படி தெரிந்தவராக இருந்தாலும், பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமே இந்த செய்தி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+