மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு தவணை முறையில் பகிர்ந்தளித்து வருகிறது. தற்போது இந்த மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய அரசு 16வது நிதிக்குழுவை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அம்மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் தமிழகம் வந்த அரவிந்த் பனகாரியா தலைமையிலான நிதிக் குழு உறுப்பினர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாநில அரசுகளுக்கான வரி பகிர்வை 41 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நிதிக் குழுவிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதுதவிர, கேரளா, குஜராத், கோவா,பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு பனாகாரியா தலைமையிலான குழு சென்றபோதும், அம்மாநில அரசுகளும் மாநில அரசுகளுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் அரவிந்த் பனகாரியாவிடம் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், ஒடிசா அரசும் மாநில அரசுகளுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கொடி பிடித்துள்ளது.

நான்கு நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ள மத்திய நிதிக் குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் அம்மாநில மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது, நிதிக் குழுவிடம், மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் மோகன் சரண் மாஜி கோரிக்கை விடுத்தார். மேலும், மத்திய வரிகளில் முந்தைய நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தனது மாநிலத்தின் பங்கை தற்போதைய 4.52 சதவீதத்திலிருந்து 4.96 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
செஸ் மற்றும் உபரி கட்டண வருவாயிலும் மாநிலங்கள் தங்கள் பங்கினை பெறும் வகையில் அவற்றை பிரிக்கக்கூடிய தொகுப்பில் சேர்க்க வேண்டும் என்று ஒடிசா அரசு கோரிக்கை விடுத்தது. பெரும்பான்மையான மாநிலங்கள் மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீமாக உயர்த்த வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கியுள்ளதால், மத்திய நிதிக் குழு இதனை பரிசீலித்து தனது பரிந்துரையை மத்திய அரசிடம் சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications