இந்திய மக்களை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து மூலம் 275 பேர் உயிரிழந்த நிலையில் அரசு தரப்பில் இருந்து மட்டும் அல்லாமல் தனியார் தரப்பில் இருந்தும் அதிகப்படியான உதவிகளை செய்ய முன்வந்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவித்த நிலையில் ரயில் டிக்கெட் எடுக்கும் போது இன்சூரன்ஸ் செய்த மக்களுக்கும் வேகமாக காப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் விதமாக இந்தியாவின் பெரும் தொழிலதிபரான கௌதம் அதானி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளர். கௌதம் அதானி தனது டிவிட்டரில் ஒடிசா ரயில் விபத்து நாம் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளோம்.

இந்த மோசமான விபத்தில் பெற்றோர்களை இழந்து அப்பாவி மக்களின் குழந்தைகளுக்கு பள்ளி கல்விக்கான செலவுகளை அதானி குரூப் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களும், அவர்களின் குடும்பத்திற்கும் நம்பிக்கையை கொடுப்போம், அவர்களின் குழந்தைகளுக்கு வலிமையான எதிர்காலத்தை கொடுப்போம் என தெரிவித்தார் கௌதம் அதானி.
மேற்கு வங்காளத்தின் ஷாலிமார் ரயில்வே நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலையத்திற்கு அருகே வந்தபோது சரக்கு ரயில் மோதியது, இதை தொடர்ந்து பெங்களூரில் இருந்து வந்த மற்றொரு ரயில் விபத்துக்குள்ளான ரயில் மீது மோதி அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்திற்குள்ளாகியது.

இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றம். இன்டர்லாக் அமைப்பு என்பது ஒட்டுமொத்த ரயில்வே கட்டமைப்பின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் முக்கியமான தொழில்நுட்ப அமைப்பு.
இந்த விபத்துக்கு பின்பு ரயில்வே டிக்கெட் எடுக்கும் போது அதில் கொடுக்கப்பட்டும் இன்சூரன்ஸ் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. மேலும் ரயில்வே நிர்வாகம் இந்த மோசமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், சிறிய காயங்கள் உடன் இருப்பவர்களுக்கு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications