ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உடன் 1 பயணிகள் ரயில், 1 சரக்கு ரயில் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளானது இந்திய மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காட்டு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கே மீட்பு பணிகள் மேற்கொள்வது கடினமாகி உள்ளது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இதுவரையில் 5 முறை பல்வேறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
15 மார்ச் 2002 அன்று, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவூர் பகுதியில் படுகுபாடு சாலை மேம்பாலத்தில் மதியம் 2:40 மணியளவில் ஹவுரா-சென்னை மத்தியில் இயங்கும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டதில் 100 பயணிகள் காயமடைந்தனர்.

இதேபோல் 13 பிப்ரவரி 2009 அன்று ஒரிசாவில் புவனேஸ்வரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை அருகே, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் ரயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவில்லை.
டிசம்பர் 30, 2012 அன்று ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதில் இரண்டு குட்டி யானைகள் உட்பட ஆறு யானைகள் கொல்லப்பட்டன.
14 ஜனவரி 2012 அன்று, லிங்கராஜ் ரயில் நிலையம் அருகே சென்னை-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஜெனரல் கம்பார்ட்மென்ட்-ல் தீ விபத்து ஏற்பட்டது தீ பரவுவதற்கு முன்பே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட உடனே தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு 20 நிமிடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
18 ஏப்ரல் 2015 அன்று, நிடதவோலு ஜங்ஷன் (Nidadavolu Junction) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்தது. இதில் இரண்டு பெட்டிகள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை.
இன்று நடந்துள்ள விபத்தில் மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா-வில் இருக்கும் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 3.20 மணிக்கு 12841 எண் கொண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஹவுரா-வில் இருந்து ஒடிசா, ஆந்திரா வழியாகச் சென்னை வந்தடையும்.
ஹவுரா-வில் இருந்து கிளம்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று மாலை பாலசோர் (Balasore) மாவட்டத்தில் வரும் போது விபத்தில் சிக்கியுள்ளது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது, இதில் தடம் புரண்ட 10க்கும் அதிகமான பெட்டிகள் மீது யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து உள்ளாகி இருக்கிறது.
இந்த விபத்தில் இதுவரையில் 30க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற 700க்கும் அதிமான மக்கள், அரசு ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.
மேலும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் விபத்து பகுதிக்கு விரைந்துள்ளார், பாதிக்கப்பட்டவர்களை மீட்க புவனேஷ்வர், கொல்கட்டாவில் இருந்து Rescue team விபத்து பகுதிக்கு அனுப்பட்டு உள்ளனர், விமான படையும் விபத்து பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அஷ்வினி வைஷ்னாவ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications