2020-ம் ஆண்டு தொடக்கத்தில், உலக பொருளாதாரா வளர்ச்சி, இந்திய பொருளாதார வளர்ச்சி எல்லாம் எவ்வளவு அதிகரிக்கும் என போட்டி போட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் கொரோனா வைரஸ் வந்த பின், நாட்டின் பொருளாதாரம் தொடங்கி உலக பொருளாதாரம் வரை, வீழ்ச்சி காணாமல் இருந்தாலே போதும் என்கிற ரேஞ்சுக்கு எல்லோரும் வந்துவிட்டார்கள்.
இந்தியா மற்றும் உலக பொருளாதாரம் இந்த 2020 - 21 நிதி ஆண்டில் எப்படி இருக்கும் என ஒரு கணிப்பை வெளியிட்டு இருக்கிறது OECD.
இந்தியா
Organisation for Economic Co-operation and Development - OECD அமைப்பு இந்திய பொருளாதாரம் 2020 - 21 நிதி ஆண்டில் இதே நிலை நீடித்தால் 3.7 % வரை சரிவைக் காணலாம் எனக் கணித்து இருக்கிறது.அதோடு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) 8.2 - 8.9 %-க்குள் கட்டுப்படுத்தப்படலாம் எனவும் சொல்லி இருக்கிறது OECD.
இரண்டாம் அலை
ஒருவேளை 2020-ம் ஆண்டின் இறுதிக்குள், கொரோனா இன்னொரு அலை அடித்தால், இந்திய பொருளாதாரம் 7.3 % வரை சரிவைக் காணலாம் எனச் சொல்லி இருக்கிறது OECD. கடந்த மார்ச் 2020-ல் இந்தியா 2020 - 21 நிதி ஆண்டில் 5.1 % வளர்ச்சி காணலாம் எனச் கணித்து இருந்தது பெரு மூச்சோடு குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதாரத்தின் கொரோனா பாதிப்புகள்
இந்தியா, கொரோனா வைரஸ் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாலும், கொரோனா ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தில் இருந்து மீள்வது அத்தனை எளிதல்ல எனவும் குறிப்பிட்டு இருக்கிறது OECD. அடித்தட்டு மக்கள் கையில் வருமானம் இல்லாததால் உள் நாட்டு தேவை சரிவது, அமைப்பு சாரா தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் மாநிலத்தை விட்டு, வேலை கிடைக்கும் மாநிலங்களுக்கு வருவது எல்லாம் சிக்கல் தான் என்கிறது OECD.
உலக பொருளாதாரம்
2020-ம் ஆண்டு உலக பொருளாதாரம் சுமாராக 6 % சரியலாம் எனக் கணித்து இருக்கிறது. 2021-ம் ஆண்டு உலக பொருளாதாரம் 5.2 % வளர்ச்சி காணலாம் என பாசிட்டிவாக கணித்து இருக்கிறது OECD. ஆக கொரோனா மறைந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் மறைய கொஞ்சம் நாள் ஆகும் போலிருக்கிறதே!


Click it and Unblock the Notifications