டெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2020 - 2024ம் ஆண்டில் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) தெரிவித்துள்ளது.
இது கடந்த 2013 - 2017ம் ஆண்டின் சராசரியான 7.4 சதவிகிதத்தினை விட குறைவு என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு வெளியிட்ட பொருளாதார கண்ணோட்டத்தில் 2013 - 2017ம் ஆண்டை விட, 2020 - 2024ஆம் ஆண்டில் இந்தியா மிக சாதாரணமாகவே வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்
வளர்ச்சி மிக சாதாரணமாக வளரும் என்று கூறப்பட்டாலும், அதே நேரத்தில் வங்கித்துறை மீண்டும் வளர ஆரம்பித்துள்ளது என்றும் ஆசியவிற்காக பொருளாதார பார்வையில் அது கூறியுள்ளது. வங்கித் துறையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தக்கவைத்துக் கொள்வது இந்தியாவுக்கு ஒரு முக்கியமான சவால் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பின் ஏற்றத் தாழ்வைக் கட்டுப்படுத்துவது, நகரமயமாக்கலுக்கு தீர்வு காணும் போது முதலீடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை பரப்புவது முக்கியமானது என்றும் கூறியுள்ளது.
டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த வேண்டும்
இதே இந்த அமைப்பு 2020 - 2024ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.7 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது கடந்த 2013 - 2017ல் 6.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையின் படி, சீனா தேவைக்கும் சப்ளைக்கும் இடையிலான டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதே இந்தியாவைப் பொறுத்தவரை இதே நேரத்தில் இந்தியாவில் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதும், டிஜிட்டல் சாதனங்களுக்கான அணுகலை அதிகரிப்பதும் முக்கியம் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு தேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
இதே சீனா அமெரிக்கா இடையே தொடர்ந்து நிகழ்ந்து வரும் வர்த்தக போர், மேலும் பொருளாதாரங்களில் பலவீனமான போக்கினையே ஏற்படுத்தி வருகிறது. இது ஏற்றுமதி வாய்ப்புகளிலும் பலவீனமாக வாய்ப்புகளையும், நிச்சயமற்ற தன்மையே சேர்க்கிறது. மேலும் இது தொழிலாளர் சந்தையில் உள்ள ஸ்திரத்தன்மை மற்றும் சில சந்தர்ப்பங்களில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களிடம் இருந்து வருவதும், இதே உள்நாட்டு நுகர்வு நீடிக்கும் நிலை, மேலும் உள்நாட்டு தேவைக்கு தொடர்ந்து அதிக ஊக்கத்தை அளிக்க வேண்டும் என்றும், இது பொருளாதாரத்தினை மேம்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.
அரசின் நடவடிக்கைகள்
நிலவி வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பல அதிரடியான திட்டங்களையும் தீட்டி வருகிறது. இது வரும் காலாண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு துணைபுரியலாம் என்றும் கூறப்படுகிறது. பல சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் கொடுத்து வரும் பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி குறித்து மந்த நிலையை குறிப்பிட்டாலும், அரசின் நடவடிக்கைகளால் இது மேம்படும் என்றே கருதலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications