உலக நாடுகளில் அடுத்தடுத்துப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீட்டைப் பாதிக்கும் என OECD அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 2021ஆம் ஆண்டுக்கான சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீட்டு கணிப்பையும் குறைத்து, கோவிட் வேக்சின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி வாய்ப்புகளும் குறையும் என OECD அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ்
இந்த ஒமிக்ரான் வைரஸ் மூலம் உலக நாடுகளில் இருந்து பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளது எனவும் OECD அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி அளவீட்டையும் OECD அமைப்பு குறைத்துள்ளது.
OECD அமைப்பு
OECD அமைப்பு 2021ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ள நிலையில் தற்போது 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் உலகில் மக்களுக்குக் குறைவான வேக்சின் செலுத்தியுள்ள நாடுகளை மிகவும் எச்சரிக்கை உடன் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
மேலும் 2022ஆம் ஆண்டுக்கான சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவீட்டை தற்போதைய நிலையில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காமல் அதே 4.5 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது. மேலும் குறைவான வேக்சின் செலுத்தியுள்ள நாடுகள் ஒமிக்ரான் வைரஸ்-க்கு breeding grounds ஆகவும் மாற வாய்ப்பு உள்ளது எனவும் OECD அமைப்பு தெரிவித்துள்ளது.
நிச்சயமற்ற தன்மை
சர்வதேச பொருளாதாரம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் நிலையில் ஒமிக்ரான் வைரஸ் அதிகப்படியான நிச்சயமற்ற தன்மை மற்றும் அபாயங்களைப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்துகிறது என OECD அமைப்பின் தலைமை பொருளாதார வல்லுனர் லாரன்ஸ் பூன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
முக்கியப் பாதிப்பு
ஒமிக்ரான் வைரஸ் மூலம் உலக நாடுகளில் அதிகப்படியான பணவீக்கம், சப்ளை செயின் பாதிப்பு, வளர்ச்சி கொள்கையில் பாதிப்பு, சுகாதாரம் ஆகியவை முக்கியப் பாதிப்பாக இருக்கும் என OECD அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ்-ஐ முழுமையாக ஒழிக்கும் வரை பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications