அமெரிக்கா: கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் வொர்க் ஃபிரம் ஹோம் என்ற முறையை கொண்டு வந்தன. தற்போது அமெரிக்காவின் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை தொடர்ந்து வருகின்றன.
இல்லையெனில் ஹைப்ரிட் மாடலில் இயங்குகிறது, இதனால் பல நிறுவனங்களுக்கு அலுவலகத்திற்கான தேவை குறைந்து வருகிறது. இதேபோல் செலவுகளை குறைக்கும் திட்டத்துடன் சிறு, குறு நிறுவனங்களும், மந்தமான வர்த்தகத்தை எதிர்கொள்ளும் நிறுவனங்களும் அலுவலகங்களை காலி செய்து வருவதால் அமெரிக்க ஆபீஸ் ரியல் எஸ்டேட் மந்த நிலையில் உள்ளது.

இதன் காரணமாக அங்கே அலுவலகங்களாக செயல்பட்டு வந்த கட்டடங்கள் காற்று வாங்குகின்றன. இதனால் அலுவலக கட்டடங்களின் மதிப்பு பல மடங்கு சரிந்துள்ளது.
வொர்க் பிரம் ஹோம் முறை காரணமாக அலுவலகங்களுக்கான தேவை குறைந்துவிட்டது. இதனால் அமெரிக்காவில் பெரும்பாலான அலுவலகங்கள் தற்போது காலியாக உள்ளன. பல அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்காமலேயே இருக்கின்றன.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் உள்ள அலுவலக கட்டடங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருப்பதால் வந்த விலைக்கு விற்கப்படுகின்றன. குறிப்பாக மிகப்பெரிய அளவிலான தள்ளுபடியில் இந்த கட்டடங்கள் விற்பனைக்கு வருகின்றன.
அந்த வகையில் ஒரு ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு அலுவலக கட்டடம் 75% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
1,75,000 சதுர அடி கொண்ட பெர்மான்ட் அவன்யூவில் இருக்கக்கூடிய கட்டடம் வெறும் 16 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டடம் கடந்த 2006 ஆம் ஆண்டு 60 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 16 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் கூட இந்தக் கட்டடத்தின் மதிப்பானது 72 மில்லியன் டாலர்களாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
இந்த எக்ஸ் தள பதிவிற்கு கோடக் மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர் அளித்துள்ள ரிப்ளையில், வாஷிங்டனில் உள்ள ஒரு கட்டடம் ஒரு சதுர அடி வெறும் 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது, அமெரிக்காவில் இது போன்ற வணிக நோக்கத்திற்காக கட்டப்பட்ட கட்டிடங்களின் நிலை தற்போது பரிதாபமாக இருக்கிறது இந்த இழப்புகளை யார் ஏற்றுக் கொள்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் நியூயார்க்கின் மேன்ஹத்தானில் உள்ள ஒரு அலுவலக கட்டடம் இதேபோல 70% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களில் கூட இவ்வளவு குறைவான விலையில் கட்டடங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என எக்ஸ் தள பயனாளர்கள் நக்கலாக கூறியுள்ளனர்.
போகிற போக்கை பார்த்தால் இந்தியாவை விட்டு அமெரிக்காவில் இடம் வாங்கி விடலாம் போல இருக்கிறதே என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications