கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதித்தன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையிலேயே பணி செய்ய வைத்தன.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து உலகம் இயல்பு நிலைக்க திரும்பிய பிறகு பணியாளர்கள் மீண்டும் அலுவலகத்திற்கே வந்து வேலை செய்ய வேண்டும் என நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு பெரும்பாலான ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

வீட்டிலிருந்து பணிபுரிவதையே பலரும் விருப்ப தேர்வாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்க வேண்டும் அதற்கேற்றவாறு அலுவலக சூழலை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நிறுவனங்கள் புதிய வழிமுறைகளை கையில் எடுத்துள்ளன.
ஆங்கிலத்தில் "Office Peacocking" என இது அழைக்கப்படுகிறது. அதாவது அலுவலக சூழலை மாற்றி அமைப்பது. தற்போது மேற்கத்திய நாடுகளில் உள்ள அலுவலகங்களில் பணியாளர்கள் நீண்ட நேரத்தை செலவழிக்கும் வகையில் கட்டமைப்புகளை மாற்றி வருகின்றனர்.
சொகுசான சோஃபாக்கள், இயற்கையான ஒளி கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை மாற்றுதல், ஓய்வு எடுப்பதற்கான இடங்கள், விளையாடுவதற்கான இடங்கள், வீட்டில் இருப்பதை போன்ற சமையலறை அமைப்புகள் ஆகியவை ஏற்படுத்தப்படுகின்றனவாம்.
அவுல் லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிராங்க் விசாபுட் " பல்வேறு நிறுவனங்களும் தற்போது தங்களுடைய ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கே வந்து பணி புரிய வேண்டும் எனவும் இது கட்டாயம் என்றும் வலியுறுத்துகின்றன. ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
வீட்டிலிருந்து பணிபுரிவதற்காக 10% அளவிற்கு தங்களது ஊதியத்தை குறைத்தால் கூட பரவாயில்லை என 62% ஊழியர்கள் கூறுவதாக தாங்கள் நடத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது" என கூறுகிறார்.
பலரும் வீட்டு சூழலிலேயே பணி புரிய விரும்புகின்றனர், இல்லையெனில் ஹைபிரிட் எனப்படும் சில நாட்கள் அலுவலக வேலை சில நாட்கள் வீட்டில் இருந்து வேலை என்ற முறையை விரும்புகின்றனர் என தெரிவிக்கிறார்.
இதனிடையே காபி பேட்சிங்(Coffee Badging) என்ற ஒரு டிரெண்டும் தற்போது புதிதாக அறிமுகமாகியுள்ளது . இதன்படி ஊழியர்கள் காபி பிரேக் எடுப்பதற்காக மட்டுமே அலுவலகங்களுக்கு வருவது. தாங்கள் முழு நேரமாக அலுவலகத்தில் வந்து பணி புரிவதற்கு தயாராக இல்லை என்பதை காட்டுவதற்காக மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் பலரும் இந்த காபி பேட்சிங் முறையை கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications