இந்தியாவின் மிக முக்கியமான அலுவலக ரியல் எஸ்டேட் சந்தையான பெங்களூரில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மிகவும் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவின் சிலிக்கான் வேலியாகப் பார்க்கப்படும் பெங்களூரில் அலுவலக இடங்களின் மொத்த குத்தகை வருடாந்திர அடிப்படையில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் புதிய அலுவலக இடங்கள் சந்தைக்கு வரும் அளவீடும் 25 சதவீதம் குறைந்துள்ளது என்று வெஸ்டியன் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் ஆலோசக நிறுவனமான வெஸ்டியன், பெரிய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைப்பதன் மூலம் பெங்களூரில் அலுவலகத் தேவை இனி வரும் காலத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது.

இந்தக் காலண்டர் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான அலுவலகச் சந்தை அறிக்கையை வெஸ்டியன் வெளியிட்டது, இதில் நாட்டின் டாப் ஏழு நகரங்களில் அலுவலகக் குத்தகையில் 21 சதவீத வளர்ச்சியையும், புதிய அலுவலக இட விநியோகத்தில் 26 சதவீத வளர்ச்சியையும் எதிர்கொண்டு உள்ளது.
இதன் மூலம் ஜூலை-செப்டம்பர் காலப்பகுதியில் மட்டும் சுமார் 15.9 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை நாட்டின் ஏழு முக்கிய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, மும்பை, புனே, டெல்லி-என்சிஆர் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் குத்தகை விடப்பட்டு உள்ளது.
இந்த ஏழு நகரங்களில் செப்டம்பர் காலாண்டில் புதிய அலுவலக இடங்கள் 26 சதவீதம் அதிகரித்து 13.4 மில்லியன் சதுர அடி அலுவலக இடம் சந்தைக்கு வந்துள்ளது என வெஸ்டியன் தரவுகள் கூறுகிறது. வெஸ்டியன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் ராவ் கூறுகையில், செப்டம்பர் காலாண்டில் இந்திய அலுவலகத் ரியல் எஸ்டேட் செயல்பாடுகளை அதிகரித்தது தொற்றுநோய் காலகட்டத்திற்கு அதிகப்படியான அலுவலக இடத்திற்குக் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூர், டெல்லி என்சிஆர் பகுதியில் அலுவலகக் குத்தகை ஒப்பந்தம் 28 சதவீதம், 14 சதவீதம் சரிந்த நிலையில், சென்னையில் அலுவலகக் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்ட இடவசதி 82 சதவீதமும் அதிகரித்துள்ளது, இதேபோல் சந்தைக்குப் புதிதாக வந்த இடவசதிகள் அளவும் 71 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல் ஹைதராபாத்தில் அலுவலகக் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்ட இடவசதி 270 சதவீதமும் அதிகரித்துள்ளது, சந்தைக்குப் புதிதாக வந்த இடவசதிகள் அளவும் 175 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications