அம்பானி வீட்டில் டும் டும் டும்.. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட்-க்கு நிச்சயதார்த்தம்..!

அம்பானி வீட்டில் அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள் நடந்து வருகிறது, கடந்த சில வருடத்தில் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி ஆகியோரின் திருமணம், அனில் அம்பானி மகனின் திருமணம், ஆகாஷ் அம்பானி மகன் பிரித்வி பிறந்தது, கடந்த மாதம் ஈஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது என அடுத்தடுத்து வர்த்தகச் செய்திகளைத் தாண்டி குடும்பத்தில் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் அரங்கேறி வந்தது.

இந்த நிலையில் தான் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி ஆகியோரின் திருமணத்தில் இருந்து ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் குறித்த செய்தி இணையதளத்தைக் கட்டியாண்டு வரும் நிலையில்..

முகேஷ் அம்பானி உடனான ராதிகா மெர்சண்ட்-ன் ஆன்மீக சுற்றுலா-க்கு பின்பு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட்-வின் நிச்சயதார்த்தம் செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆனந்த் அம்பானி வர்த்தக ரீதியிலும், குடும்ப வாழ்க்கையில் ஓரே நேரத்தில் செட்டில் ஆக உள்ளார்.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட்

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட்

ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் ரோகா விழா அதாவது பஞ்சாபி வழக்கத்தில் திருமணத்திற்கு முன்பு இரு குடும்பமும் திருமணத்தை நிச்சயம் செய்யும் நிகழ்வு தான் ரோகா விழா.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்சன்ட்-ன் மகளான ராதிகா மெர்சண்ட்-ன் ரோகா விழா ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடந்தது. ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் நியூ எனர்ஜி வர்த்தகத்தை மொத்தமாக நிர்வாகம் செய்ய உள்ளார்.

பரிமல் நத்வானி டிவீட்

பரிமல் நத்வானி டிவீட்

இந்த ரோகா விழா மிகவும் நெருக்கமானவர்கள் மத்தியில் மட்டுமே நடந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் கார்ப்பரேட் விவகார இயக்குநரும், ராஜ்யசபா எம்பியுமான பரிமல் நத்வானி தனது ட்விட்டரில், "நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடந்த ரோகா விழாவிற்கு அன்பான ஆனந்த் மற்றும் ராதிகாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பகவான் ஸ்ரீநாத் ஜியின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும் என டவீட் செய்துள்ளார். இதன் மூலம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோரின் ரோகா விழா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலுக்குச் சென்று ஸ்ரீநாத்ஜியின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். ஆனந்தும் ராதிகாவும் ஒருவரையொருவர் கடந்த சில வருடங்களாகத் தெரிந்துகொண்டு காதலித்து வந்தனர்.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

இன்றைய விழாவில் அவர்களின் திருமணத்தின் முறையான பயணம் தொடங்குகிறது. ராதிகா மற்றும் ஆனந்த் இருவரும் தங்களது வாழ்க்கை பயணத்தை ஒன்றாக இணைந்து தொடங்கும் வேளையில் இரு குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை முடித்தார் மற்றும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கிரீன் எனர்ஜி வர்த்தகத்தை வழிநடத்துகிறார். மேலும் அவர் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் போன்ற இணை நிறுவனங்களின் பல துணை நிறுவனங்களில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

ராதிகா மெர்ச்சன்ட்

ராதிகா மெர்ச்சன்ட்

என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் மருந்து நிறுவனமான என்கோர் ஹெல்த்கேரின் வாரிய இயக்குநராக உள்ளார்.

ராதிகா மெர்ச்சன்ட் முதல் வேலை

ராதிகா மெர்ச்சன்ட் முதல் வேலை

2017 இல், தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் Isprava Groupல் சேர்ந்தார், இது ஒரு ஆடம்பர ஹாலிடே ஹோம் டெவலப்பர் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் நாதிர் கோத்ரேஜ், ஆனந்த் பிரமல் மற்றும் டாபர் இந்தியாவின் பர்மன் குடும்பம் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.

ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டியம்

ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டியம்

ராதிகா மெர்ச்சன்ட் தனது பள்ளிப் படிப்பை மும்பையின் புகழ்பெற்ற கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் முடித்தார். மேலும் ராதிகா மெர்ச்சன்ட் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார், இவர் குரு பாவனா தாக்கரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற்றார்.

ராதிகா மெர்ச்சன்ட் அரங்கேற்றம்

ராதிகா மெர்ச்சன்ட் அரங்கேற்றம்

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ராதிகா மெர்ச்சன்ட்டின் அரங்கேற்றம் விழாவை அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அமீர் கான், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், சகாரிகா காட்கே, ரன்வீர் சிங் மற்றும் சல்மான் கான் எனப் பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். பரதநாட்டியம் மட்டுமின்றி, மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் உண்டு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+