மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டிற்கு திருமணம் முடிவடைந்துள்ள நிலையில் அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினரின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு நேற்று மும்பையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்சண்டின் மகளான ராதிகா மெர்சண்டிற்கும் ஓராண்டுக்கு முன்னரே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனை அடுத்து குஜராத்தி பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கிட்டதட்ட ஒரு வார காலமாகவே இதற்காக மும்பை திருமண கோலம் பூண்டிருந்தது. அதிகாரப்பூர்வமாக தற்போது திருமணம் முடிவடைந்து ராதிகா மெர்சண்ட் மற்றும் ஆனந்த் அம்பானியின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்களும் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் மாலை அணிந்த வண்ணம் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்ப உறவினர்களும் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தன்னுடைய திருமணத்திற்காக ராதிகா , அபூஜானி வடிவமைத்த ஆடையை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த நகைகளும் தனித்துவமாக இருந்தன.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா இருவருக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் அம்பானி குடும்பத்தினர் குஜராத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளை நடத்தினர். மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்வதேச பிரபலங்களும், தொழிலதிபர்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதனை அடுத்து ஜூன் மாதம் 1ஆம் தேதி ஐரோப்பாவில் சொகுசு கப்பல் ஒன்றில் மீண்டும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதிலும் பல்வேறு பிரபலங்களும் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தற்போது குஜராத்தி பழக்க வழக்கங்களை பின்பற்றி மும்பையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நாளைய தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அம்பானி குடும்ப திருமண நிகழ்வு என்பதால் மும்பையே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பல்வேறு சர்வதேச பிரபலங்களும் மும்பையில் குவிந்திருக்கின்றனர். தனிப்பட்ட விமானங்களில் கூட பிரபலங்கள் மும்பைக்கு வருகை தந்துள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications