டீசல் விற்பனையில் நட்டம், பெட்ரோல் விற்பனையில் அய்யய்யோ.. எண்ணெய் நிறுவனங்கள் புலம்பல்..!!!

இந்தியாவில் வருட கணக்கில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் இருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதன் உச்சக்கட்ட விலையில் பெரிய அளவில் குறைந்த வேளையிலும், ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய் தள்ளுபடி விலையில் வாங்கப்பட்ட நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் உள்ளது.

இதன் எதிரொலியாக மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக இடைத்தேர்தலில் மோடி அரசு மீண்டும் வெற்றிபெற இடைக்காலப் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலையை 10- 11 ரூபாய் குறைக்கும் எனக் கணிப்புகள் வந்த நிலையில் இது அனைத்தும் பொய்யாய்ப் போனது. இந்த நிலையில் புதிய ரிப்போர்ட் வந்துள்ளது.

டீசல் விற்பனையில் நட்டம், பெட்ரோல் விற்பனையில் அய்யய்யோ.. எண்ணெய் நிறுவனங்கள் புலம்பல்..!!!

மத்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் ரீடைல் நிறுவனங்கள் டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட 3 ரூபாய் அளவிலான நஷ்டம் அடைந்து வருகின்றனர். அதேசமயம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மீதான லாபம் குறைந்துள்ளது என்று இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை இந்தியாவின் எரிபொருள் சந்தையில் சுமார் 90 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது.

இந்த நிலையில் இந்த 3 நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை 2 வருடங்களாக மாற்றவில்லை. ஏறக்குறைய இரண்டு ஆண்டுக் காலமாகப் பெட்ரோல், டீசல் உற்பத்தியில் இருக்கும் உள்ளீடு செலவு அதிகமாக இருக்கும் வேளையில் நஷ்டமும், மூலப்பொருள் விலை குறைவாக இருக்கும்போது லாபமும் ஏற்படுகிறது என இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்ய 85 சதவீதம் இறக்குமதியைச் சார்ந்து இருப்பதால், சர்வதேச எண்ணெய் விலை அடிப்படையில் பொருளின் உள்நாட்டு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக் கச்சா எண்ணெய்யின் சர்வதேசச் சந்தை விலை குறைந்து காணப்பட்டது, ஆனால் ஜனவரி இரண்டாம் பாதியில் மீண்டும் உயர துவங்கியது.

மத்திய அரசின் அறிவுறுத்தல் படி தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த கச்சா எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2 வருடங்களாக மாறாமல் உள்ளது. இந்த 2 வருடத்தில் பெரும்பாலான காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை குறைவாகவே இருந்தது, ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் முன்பு எதிர்கொண்ட இழப்புகளை ஈடுசெய்யவில்லை.

இதன் வாயிலாகத் தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கும் வேளையில் டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் நஷ்டத்தையும், பெட்ரோல் லிட்டருக்கு வெறும் 3-4 ரூபாய் லாபத்தில் விற்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பெட்ரோல், டீசலில் தற்போது எத்தனால் மற்றும் பயோடீசல் கலக்கப்பட்டு வருகிறது.

போகிற போக்கைப் பார்த்தால் தேர்தலுக்குப் பின்பு பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+