இந்திய ஆயில் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த மாதத்திற்கான விலையை நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ளன. அதன்படி புதிய மாதம் தொடங்கி உள்ள நிலையில், கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், பொதுமக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிசக்தி தேவை அதிகரித்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி, பணவீக்க சுமையை அதிகப்படுத்தியுள்ளன
இந்தியன் ஆயில் நிறுவனம் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலையை ரூ.16.50 உயர்த்தியதால், சென்னையில் ரூ.1980.50 ஆக உயர்த்தியுள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலை அப்படியே நீடிப்பதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது. சென்னையில் 14.2 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து ரூ.818.50 ஆக உள்ளது. இது கடந்த ஆகஸ்ட் 2024 முதல் மாறாமல் உள்ளது.

அரசு எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்தியதை அடுத்து, புதிய விலை இன்று முதல் நாடு முழுவதும் அதாவது டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் எல்பிஜி சிலிண்டர்களின் விலைகள் அதிகரித்திருந்தன. இப்போதும் எண்ணெய் நிறுவனங்கள் வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தியள்ளது. ஆனால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை சீராக இருந்தது.
எல்பிஜி சிலிண்டர்களின் விலை: டிசம்பர் 1ம் தேதி தலைநகர் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.16.50 அதிகரித்துள்ளது.இதனையடுத்து தற்போதைய சிலிண்டரின் விலை ரூ.1818.50 ஆக உயர்ந்தது. முன்னதாக டெல்லியில் வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1802 ஆக இருந்தது.
அதேபோல், நாட்டின் நிதித் தலைநகர் மும்பையில் இன்று 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.16.50 அதிகரித்துள்ளது. இன்றுமுதல் வணிக எரிவாயு சிலிண்டர் இங்கு ரூ.1771க்கு கிடைக்கிறது. முன்னதாக, இங்கு வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1754.50 ஆக இருந்தது.
கொல்கத்தாவில் இன்று 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.15.50 அதிகரித்துள்ளது. 1911.50 ரூபாயாக இருந்த வணிக எரிவாயு சிலிண்டர் தற்போது இங்கு 1927 ரூபாய் ஆகியுள்ளது.
சென்னையில் 19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.16 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1980.50 ஆகிவிட்டது. இது முன்பு ஒரு சிலிண்டரின் விலை ரூ.1964.5 ஆக இருந்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications