பெட்ரோல் விற்பனையில் கல்லாகட்டும் எண்ணெய் நிறுவனங்கள்.. ஆனா டீசல்..?

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குக் கச்சா எண்ணெய் விலை எந்த அளவுக்கு முக்கியம் என அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையில் மாதக் கணக்கில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனையில் வரி விதிப்பு மூலம் மத்திய மாநில அரசுகள் அதிகப்படியான வரி வருமானத்தைப் பெறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல்-க்கு எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா..?

இதேபோல் இந்திய ரீடைல் எரிபொருள் சந்தையில் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

எண்ணெய் நிறுவனம்

எண்ணெய் நிறுவனம்

மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை கடந்த 15 மாதங்களாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் விலையை மாற்றாமல் இருந்த காரணத்தால் இதற்கு முன்பு ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்துள்ளது.

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ரீடைல் சந்தைக்கு அளிக்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 10 ரூபாய் அளவிலான லாபத்தைப் பார்க்கிறது, இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 6.5 ரூபாய் வரையிலான நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

 லாபத்தின் அளவு

லாபத்தின் அளவு

இந்த லாபத்தின் அளவு மத்திய அரசுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மார்கெட்டிங் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்-களுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல் டீசலில் இருந்து கிடைக்கிறது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் வெளியிட்ட அறிவிப்பில் 2022 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி முடிவில் ஒரு லிட்டர் பெட்ரோல்-க்கு 17.4 ரூபாய் நஷ்டமும், டீசலுக்கு 27.7 ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. ஆனால் டிசம்பர் உடன் முடிந்த காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாய் லாபத்தையும், டீசல்-க்கு 6.5 ரூபாய் நஷ்டத்தையும் பதிவு செய்து வருவதாகத் தெரிவித்து வருகிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இதேவேளையில் ஏப்ரல் 6 முதல் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 102.97 டாலர் விலையில் துவங்கி ஜூன் மாதம் 116.01 டாலர் விலையில் உள்ளது. இந்த மாதம் 78.09 டாலராகச் சரிந்துள்ளது. ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 3 எண்ணெய் நிறுவனங்களும் 21,201.18 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+