மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, கச்சா எண்ணெய் விலை விண்ணை தொட்டு, இந்திய பொருளாதாரம் ஒருவித அச்சத்தில் உறைந்திருந்த அந்த இக்கட்டான தருணம், இந்தியா என்னவாகுமோ என்ற கேள்வி ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் எழுந்தபோது, சிறந்த நண்பன் என்பதை மீண்டும் ஒரு முறை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது ரஷ்யா.
முதலில் சீனாவுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிய அக்வா டைட்டன் (MT Aqua Titan) கப்பல், இந்தியாவின் மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இது வெறும் செய்தி மட்டுமல்ல, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இதனிடையே மத்திய அரசு மங்களூரு துறைமுகத்தில் சரக்கு கட்டணங்களை அதிரடியாக ரத்து செய்து சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க, ரஷ்யாவின் இந்த உதவி கார் மேகங்களுக்கு இடையே கிழித்துக் கொண்டு வரும் சூரிய ஒளியை போல இந்தியாவுக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது. போர் முனையில் நெருக்கடி நிலவினாலும், பாரதத்தின் சமையலறைகளும் வாகனங்களும் தடையின்றி இயங்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ள இந்த நட்பு எண்ணெய் குறித்து விரிவாக பார்ப்போம்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால், ஹார்மூஸ் ஜலசந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் விநியோகத்தில் பல சவால்கள் நிலவி வருகிறது. இது தனது தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்யும் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான் ஆபத்து நேரத்தில் உதவும் உற்ற நண்பனாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உடன் அக்வா டைட்டன் என்ற சரக்கு கப்பல் ஆனது மங்களூரு துறைமுகம் வந்துள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு விதமான பதற்றம் மத்தியில் வந்துள்ள பெரும் ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
கூடுதலாக இதில் ,மற்றொரு ஆறுதலான விஷயம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து LPG ஏற்றிக் கொண்டு வந்த ஒரு சரக்கு கப்பல், இன்று அதிகாலை மங்களூருவில் உள்ள புதிய மங்களூரு துறைமுகத்திற்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அறிவிப்புகள் இந்தியாவில் எண்ணெய் தட்டுப்பாட்டை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை குறிக்கிறது.
கப்பல் போக்குவரத்து அமைச்சகம் புதிய மங்களூரு துறைமுகத்திற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஆகியவற்றுக்கான சரக்கு கட்டணங்களை மார்ச் 14 முதல் மார்ச் 31 வரையில் முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இது எரிபொருள் இறக்குமதியை விரைவுபடுத்தவும், தடையின்றி விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் வழிவகுக்கும்.
பாரசீக வளைகுடா பகுதியில் இருக்கும் 22 இந்திய கப்பல்களும், 611 மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் நடமாட்டத்தை கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அக்வா டைட்டன் போன்ற கப்பல்களின் வருகை என்பது வெறும் வணிக ரீதியாக மட்டுமல்ல, இது இந்தியாவின் எனர்ஜி பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு முக்கிய வெற்றியாகும். இதனால் வரும் நாட்களில் சிலிண்டர் விநியோகம் சீராகும் மற்றும் பெட்ரோல்/டீசல் தட்டுப்பாடு ஏற்படாது என்பது உறுதியாகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications