கச்சா எண்ணெய் விலையானது தினசரி உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பானது அறிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலையானது ஏற்றத்தினைக் கண்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியா, வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரையில் தினசரி 5 லட்சம் பேரல்கள் மட்டும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒபெக் அறிவிப்பால் சரிவு
சர்வதேச அளவில் எரிபொருளுக்கான தேவையானது அதிகரித்து வரும் சூழலில், ஒபெக் நாடுகளின் இந்த முடிவானது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடுகள் பெரும் இழப்பினை காண வழிவகுக்கலாம் எனலாம்.
இந்த நிலையில் தான் ஒபெக்-ன் அறிவிப்பானது வெளியான நிலையில், இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பாளர்களான HPCL மற்றும் BPCL உள்ளிட்ட பங்குகள் தொடர்ந்து குறைந்து கண்டு வருகின்றன.
பங்குகள் சரிவு
இந்தியாவின் முக்கிய சுத்திகரிப்பாளர்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பங்குகள் 4- 5% வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றன.
இது மட்டும் அல்ல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குழுமத்தின் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையும் சரிவில் காணப்படுகின்றன.
கச்சா எண்ணெய் விலையால் அழுத்தம்
எனினும் பெட்ரோநெட் எல்.என்.ஜி மற்றும் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. இது தவிர குஜராத் கேஸ் மற்றும் கெயில் பங்கு விலையும் சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் சந்தையானது மேலும் அழுத்தத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பி.எஸ் இ ஆயில் & கேஸ் குறியீடானது 126.16% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
இவ்வளவு சரிவா?
இந்த சரிவின் மத்தியில் HPCL பங்கானது 5% சரிவினைக் கண்டு, டாப் லூசராக உள்ளது. இதனையடுத்து பிபிசிஎல் பங்கானது உள்ளது. இது 4.2% எனும் அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
அதானி டோட்டல் கேஸ் பங்கு விலையானது மற்றும் இந்திய பிரசாத கேஸ் பங்கு விலையானது முறையே 2.09% மற்றும் 2.08% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இதே இந்தியன் ஆயில் பங்கும் சற்று குறைந்து காணப்படுகின்றது. ரிலையன்ஸ் பங்கு விலையானது சற்று பரவாயில்லை என்றாலும் சரிவிலேயே காணப்படுகின்றது.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்
ஒபெக்கின் முடிவால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 81.23 டாலராக பேரலுக்கு அதிகரித்துள்ளது. இதே டபள்யூ டி ஐ கச்சா எண்ணெய் விலையானது 5% ஏற்றம் கண்டு, 79.6 டாலர் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
தொடர்ந்து அமெரிக்காவில் பணவீக்கம் என்பது உச்சத்தில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பங்கு விலையில் தாக்கம் இருக்கலாம்
சீனாவில் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். இந்தியாவிலும் தேவையானது அதிகம் உள்ள சூழலில் ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையானது உச்சத்தில் காணப்படுகிறது. இனியும் அதிகரிக்கும்பட்சத்தில் மத்திய அரசு எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. விலை வரம்பினை நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனங்களுக்கு எதிராக அமையலாம். இது பங்குகளுக்கு எதிராக அமையலாம்.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications