கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட முக்கியமான துறை கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தை. 2020ல் வரலாற்றில் முதல் முறையாகக் கச்சா எண்ணெய் விலை எதிர்மறை (மைனஸ்) விலைக்குச் சென்று கச்சா எண்ணெய் முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக உலகமும் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் காரணத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை உலக நாடுகள் முழுவதிலும் பெரிய அளவில் குறைந்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டது.
இந்நிலையில் 2020 முடிவில் கச்சா எண்ணெய் சந்தை 20 சதவீத சரிவுடன் முடிவடைந்துள்ளது.
2020ன் கடைசி நாள்
2020ல் கடைசி வர்த்தக நாளான வியாழக்கிழமை வர்த்தகச் சந்தையில் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.01 சதவீதம் சரிந்து 52 செண்டுகள் குறைந்து 51.11 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதனிடையில் WTI கச்சா எண்ணெய் விலை 46 சென்ட் குறைந்து 4.94 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. கச்சா எண்ணெய் விலை ஒருபக்கம் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வரும் நிலையில் அமெரிக்க டாலரின் சரிவு மேலும் மோசம் அடையச் செய்து வருகிறது.
10 வருட சரிவு
உலகம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது கச்சா எண்ணெய் சந்தை சுமார் 10 வருடச் சரிவை எதிர்கொண்ட பிரெண்ட் மற்றும் WTI கச்சா எண்ணெய் ஏப்ரல் மாதம் முதல் வளர்ச்சி அடைந்தாலும். ஐரோப்பா மற்றும் அமெரிக்கா சந்தையில் தொடரும் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் கச்சா எண்ணெய் வளர்ச்சியைத் தடுத்து வருகிறது.
WTI கச்சா எண்ணெய்
2020 துவக்கத்தில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 63 டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் மாதத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் -37.63 டாலருக்குச் சரிந்தது. இதன் பின் பல்வேறு சரிவுகளுக்குப் பின் வளர்ச்சி அடைந்து வரும் கச்சா எண்ணெய் விலை 2020ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று 0.85 சதவீதம் சரிந்து 47.99 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்
இதேபோல் 2020 துவக்கத்தில் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 68.91 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், லாக்டவுன் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் மாதத்தில் 19.33டாலர் வரையில் சரிந்தது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று 0.85 சதவீதம் சரிந்து 51.20 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
OPEC கச்சா எண்ணெய்
மேலும் இந்தியா அதிகம் வாங்கும் OPEC கச்சா எண்ணெய் விலை 2020 துவக்கத்தில் 70.89 டாலர் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது மிகவும் மோசமாக 13 டாலர் வரையில் சரிந்தது. இந்தச் சரிவில் இருந்து அதிகளவில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் ஜனவரி மாத அளவீட்டை அடைய முடிவில்லை.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று OPEC கச்சா எண்ணெய் விலை 50.78 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications