ஓரேநாளில் 300% வீழ்ச்சி.. வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பின் காரணமாகச் சர்வதேச நிதியியல் சந்தை மிகவும் மோசமான நிலையில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அமெரிக்கக் கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு காணாத வகையில் மாபெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

Recommended Video

வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய்.. என்ன காரணம்?

ஆம், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் பியூச்சர் செவ்வாய்க்கிழமை உடன் முடிவடையும் நிலையில், இதன் மதிப்பு ஒரு பேரலுக்கு -37.63 டாலராகக் குறைந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

300 சதவீத வீழ்ச்சி

300 சதவீத வீழ்ச்சி

WTI கச்சா எண்ணெய் கடந்த மாதம் ஒரு பேரல் 20 முதல் 22 டாலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றைய வர்த்தகம் துவங்கி சில மணி நேரங்களில் WTI கச்சா எண்ணெய் விலை அதிகப்படியாக 310 சதவீதம் சரிந்து 56.720 டாலர் விலை குறைந்து. ஒரு பேரல் -38.450 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்கக் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் எப்போதும் இல்லாத வகையில் பியூச்சர் மதிப்பு மிகப்பெரிய விலை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

 

என்ன காரணம்..?

என்ன காரணம்..?

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பும் இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் தேவை இன்னும் அதிகரிக்காமல் இருக்கும் அதேவேளையில் உலக நாடுகள் இதுநாள் வரையில் கச்சா எண்ணெய் அதிகளவில் வாங்கிச் சேமித்துவிட்ட நிலையில் இனியும் வாங்கிச் சேமிக்கப் போது சேமிப்புக் கிடங்குகள் இல்லாத நிலையில் இனி வரும் நாடுகளில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் எனக் கணிப்புகள் வெளியானது.

இதன் எதிரொலியாகவே மே மாத பியூச்சர் மதிப்பு தாறுமாறாகக் குறைந்துள்ளது.

 

அமெரிக்கச் சந்தை

அமெரிக்கச் சந்தை

இதற்கு ஏற்றார் போல் அமெரிக்காவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும் காரணத்தால் தொழிற்துறை மற்றும் பொருளாதார நிகழ்வுகள் அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் WTI கச்சா எண்ணெய் தேவை உள்நாட்டிலேயே அதிகளவில் குறைந்துள்ளது.

வெளிநாட்டுச் சந்தையில் ஏற்கனவே அரபு நாடுகள் அதிகளவில் கச்சா எண்ணெய் இருப்பு அதிகமாகவும், அதிகத் தள்ளுபடி விலைில் விற்பனை செய்யும் காரணத்தால் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க எந்த நாடும் முன்வரவில்லை. இதுவும் WTI பியூச்சர் விலையைப் பாதித்துள்ளது.

 

உற்பத்தி

உற்பத்தி

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் உலகின் அனைத்து கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது உற்பத்தி அளவை குறைப்பது மட்டும் அல்லாமல் செலவுகளைக் குறைப்பதில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கொரோனா பாதிப்பின் காரணமாகச் சுமார் 131 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்கள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil plunges below zero for first time in unprecedented wipeout

Of all the wild, unprecedented swings in financial markets since the coronavirus pandemic broke out, none has been more jaw-dropping than Monday’s collapse in a key segment of U.S. oil trading. The price on the futures contract for West Texas crude that is due to expire Tuesday fell into negative territory -- minus $37.63 a barrel.
Story first published: Tuesday, April 21, 2020, 6:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X