ஈரான் உடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை.. கச்சா எண்ணெய் விலை சரிவு..!

ஈரான் உடன் உலக நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை துவங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் அனைவரும் இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து ஈரான் கச்சா எண்ணெய் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் வரும் என எதிர்பார்க்கின்றனர்.

OPEC நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவீட்டைக் கட்டுப்படுத்தி அதன் விலையைப் பல வருட உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ள இந்த வேளையில் ஈரான் கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தைக்கு வரும்போது இதன் விலை பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இன்றைய சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் சந்தை விலை 0.72 சதவீதம் சரிந்து 69.13 டாலருக்கும், பிரென்ட் கச்சா எண்ணெய் 0.86 சதவீதம் சரிந்து 71.27 டாலருக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை

ஈரான் உடன் உலக நாடுகள் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையின் காரணமாகக் கச்சா எண்ணெய் சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களது ஒப்பந்தத்தை விற்பனை செய்துள்ளனர். இதன் வாயிலாகவே இன்று கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்

கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கச்சா எண்ணெய் சேவை அதிகரித்து இதன் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது.

2015 அணுசக்தி ஒப்பந்தம்

2015 அணுசக்தி ஒப்பந்தம்

2015 அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரான் உடன் உலக நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக மந்தமடைந்து உள்ளது, இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஜூன் 10 பேச்சுவார்த்தை

ஜூன் 10 பேச்சுவார்த்தை

இந்நிலையில் வருகிற ஜூன் 10ஆம் தேதி வியன்னா-வில் ஈரான் உடன் உலக நாடுகள் மத்தியில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த 5வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா ஈரான் விதித்திருந்த வர்த்தகத் தடைகள் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல்

ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல்

இதேவேளையில் வருகிற ஜூன் 18ஆம் தேதி ஈரான் நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த அணுசக்தி ஒப்பந்தம் குறித்த 5வது ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டால் 5 லட்சம் பேரலாக இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி 10 லட்சமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் சந்தை

கச்சா எண்ணெய் சந்தை

கச்சா எண்ணெய் தேவை தற்போது அதிகமாகியுள்ள நிலையில் ஏற்கனவே OPEC நாடுகள் அதன் உற்பத்தியைக் குறைத்து விலை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் ஈரான் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+