2020ஆம் ஆண்டில் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு துறை என்றால் கச்சா எண்ணெய் சந்தை தான். உலகம் முழுவதும் வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள், உற்பத்தித் துறைகள் என அனைத்தும் முடங்கியதால் கச்சா எண்ணெய் சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதன் வாயிலாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள், பயணக் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு, கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் இந்த நிலையிலும் கச்சா எண்ணெய் விலை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை.
கச்சா எண்ணெய் விலை
கொரோனா பாதிப்பின் இந்தியாவைப் போலவே உலக நாடுகள் முழுவதும் தொழிற்சாலை, போக்குவரத்து முடங்கியது. இதுமட்டும் அல்லாமல் ஊழியர்கள் Work from Home கொடுக்கப்பட்ட காரணமாக ரீடைல் சந்தையின் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கும் பெட்ரோல், டீசல் அதிகளவில் குறைந்தது.
இன்று வரையில் ரீடைல் சந்தை விற்பனை மீள முடியாத நிலையில் கச்சா எண்ணெய் விலையும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கிறது.
WTI கச்சா எண்ணெய் விலை
2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை அதிகப்படியாக 63.27 டாலராக இருந்தது. இதன் பின்பு தொடர் சரிவை எதிர்கொண்ட WTI கச்சா எண்ணெய் ஏப்ரல் 20ஆம் தேதி வாரத்தில் -37.63 டாலராகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று WTI கச்சா எண்ணெய் விலை 45.85 டாலராக உள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை
2020ல் ஜனவரி முதல் வாரத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை அதிகப்படியாக 68.91 டாலராக இருந்த நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காரணத்தால் ஏப்ரல் 28ஆம் தேதி அதிகப்படியாக 20.46 டாலராகக் குறைந்தது.
இதன் பின் தொடர் வளர்ச்சியின் மூலம் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது 49.29 டாலர் விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை
இந்தியா தனது 80 சதவீத கச்சா எண்ணெய் விலை அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யும் பெட்ரோல் டீசல் விலை அரபு நாடுகளின் OPEC கச்சா எண்ணெய் விலை மையப்படுத்தித் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.
OPEC கச்சா எண்ணெய் விலை
2020ஆம் ஆண்டில் ஜனவரி 6ஆம் தேதி ஒரு பேரல் OPEC கச்சா எண்ணெய் விலை 70.87 டாலராக இருந்தது. இது 2020ஆம் ஆண்டின் அதிகப்படியான விலை.
உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளாக இருக்கும் OPEC கூட்டமைப்பு நாடுகளின் கச்சா எண்ணெய் விலை, லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் 12.41 டாலராகக் குறைந்தது. தற்போது இதன் விலை 48.35 டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications