கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து தடுமாற்றம் அடைந்துவந்த நிலையில் கொரோனாவின் 2வது அலையில் இந்தியா முதல் ஜப்பான் வரையில் புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதேபோல் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வரும் காரணத்தால் அதிகளவிலான கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை என்பது பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக இந்தியா போன்ற மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாட்டில் கச்சா எண்ணெய் தேவை குறையும் இச்சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும். இதனாலேயே தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் ஒரு பேரல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 0.28 சதவீதம் சரிந்து 59.62 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 0.4 சதவீதம் சரிந்து 62.94 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
OPEC அமைப்பில் இருக்கும் நாடுகள் 2020ல் ஏற்பட்ட வர்த்தகம் மற்றும் வருவாய் பாதிப்பை ஈடு செய்ய உலக நாடுகள் வேகமான வளர்ச்சிப் பாதையில் இருக்கும் போது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து அதன் விலையை அதிகளவில் உயர்த்தியது. இந்தச் சூழ்நிலையில் இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்தும் உற்பத்தியை அதிகரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உலகின் 2வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக விளங்கும் இந்தியா அரபு நாடுகளிடம் செய்யும் வர்த்தகத்தைக் குறைத்து விட்டு அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்தது. இந்தியா அரபு நாடுகளிடம் செய்யும் வர்த்தகத்தை இழந்தால் குறுகிய காலம் மட்டும் அல்லாமல் நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உணர்ந்த OPEC அமைப்பு நாடுகள் மே முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்திற்குச் சுமார் 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யைத் தினமும் கூடுதலாக உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..?
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications