இன்று இந்தியாவில் கொரோனாவினை விட மிக பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று பெட்ரோல், டீசல் விலை. ஏற்கனவே பல நகரங்களில் செஞ்சுரி அடித்து விட்டது.
இன்னும் பல நகரங்களில் 100 ரூபாய்க்கும் அருகில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது. இதன் விலை குறையவே குறையாதா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், அதற்கெல்லாம் இப்போதைக்கு வாய்ப்பே இல்ல ராஜா என்பது போல செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஏனெனில் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது.
விலை குறையுமா?
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு என்பது இப்போதைக்கு குறையுமா? என்பது பெரும் கேள்குறியாக எழுந்துள்ளது. இந்தியாவினை பொறுத்தவரையில் பெரும் அளவிலான எண்ணெய் அண்டை நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலையில், அண்டை நாடுகளின் எதிரொலி இந்தியாவில் எதிரொலிக்கிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. தற்போது மட்டும் பேரலுக்கு 1.03% அதிகரித்து, 74.27 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
WTI கச்சா எண்ணெய் விலை
இதே WTI கச்சா எண்ணெய் விலையானது தற்போது பேரலுக்கு 1.35% அதிகரித்து, 72.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக அதிகரித்து வரும் இந்த கச்சா எண்ணெய் விலையானது, தேவை அதிகரிப்பின் காரணமாக இன்னும் அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தைகளின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் கச்சா எண்ணெய் விலையானது, தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்து வருகின்றது. தற்போது பேரலுக்கு 84 ரூபாய் அதிகரித்து, 5,385 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை
டெல்லியில் பெட்ரோல் விலை - ரூ.97.22
சென்னையில் பெட்ரோல் விலை - ரூ.98.40
மும்பையில் பெட்ரோல் விலை - ரூ.103.36
பெங்களூருவில் பெட்ரோல் விலை - ரூ.100.47
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை - ரூ.101.04
டெல்லியில் டீசல் விலை - ரூ.87.97
சென்னையில் டீசல் விலை - ரூ.92.58
மும்பையில் டீசல் விலை - ரூ.95.44
பெங்களூருவில் டீசல் விலை - ரூ.93.26
ஹைதராபாத்தில் டீசல் விலை - ரூ.95.89
அதிகரித்து வரும் தேவை
கோடைகால பருவத்தில் அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தினை புதுப்பிப்பானது இடை நிறுத்தம் உள்ளிட்ட சில காரணங்களினால், ஓபெக் உற்பத்தியாளர்கள் மீண்டும் சப்ளையை தொடங்குவதில் தாமதமாகலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது.
மக்களின் எதிர்பார்ப்பு
அதோடு சர்வதேச அளவில் கொரோனாவின் பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பயன்பாடும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுவும் தேவை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எது எப்படியோ இந்திய மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்கபோவது மட்டும் உறுதி. இப்படி ஒரு நிலையில் சாமானிய மக்களின் கோரிக்கை, பெட்ரோல் டீசல் மீதான வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்பது மட்டும் தான்.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?



Click it and Unblock the Notifications