கடந்த டிசம்பர் 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $70 டாலருக்கு கீழே குறைந்துள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமை அன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $69.08 டாலராக உள்ளது. இது உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் மிகப் பெரிய வீழ்ச்சியைக் குறிக்கிறது. இந்த வீழ்ச்சி, OPEC-இன் திருத்தப்பட்ட தேவை கணிப்புகள் மற்றும் முக்கிய சந்தைகளான சீனாவின் நுகர்வு ஆகிய காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
OPEC அமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில், உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை 2024 ஆம் ஆண்டில் தினசரி 2.03 மில்லியன் பேரலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது கடந்த மாதம் எதிர்பார்க்கப்பட்ட தினசரி 2.11 மில்லியன் பேரல்கலிருந்து குறைந்துள்ளது. கடந்த மாதம் வரை, OPEC நிறுவனம் கடந்த ஜூலை 2023-ஆம் ஆண்டு முதன்முறையாக கச்சா எண்ணெய் தேவை தொடர்பான கருத்துக் கணிப்பை வெளியிட்டு அதை மாற்றமல் வைத்திருந்தது. அனால் தற்போது அதில் மாற்றம் செய்துள்ளது.

அதேபோல சீனாவில் நுகர்வு குறைந்தால் அது ஒட்டுமொத்த நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகவும் தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமையின் வர்த்தக முடிவில், பிரெண்ட் மற்றும் அமெரிக்க கச்சா எண்ணெயான WTI ஆகிய இரண்டும் விலை குறைந்தன. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $69.70 ஆக குறைந்தது. இது 3% வீழ்ச்சியைக் குறிக்கிறது. அமெரிக்காவின் கச்சா எண்ணெயான WTI, ஒரு பேரல் $66.34 ஆக குறைந்தது. இது 3.5% வீழ்ச்சியைக் குறிக்கிறது.
வருடாந்தர வீழ்ச்சியை பார்த்தால் பிரண்ட் கச்சா எண்ணெய் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 9.6 சதவீத சரிவைக் கண்டுள்ளது. அதேபோல WTI க்ரூட் 7.4 சதவீதம் வரை குறைந்துள்ளது.
பெட்ரோல் விலையும் குறைந்துள்ளது. RBOB பெட்ரோல் ஒரு கேலனுக்கு $1.8 டாலராக குரைந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், பெட்ரோல் விலை 10.7% சரிந்துள்ளது, அதே நேரத்தில் இயற்கை எரிவாயுவின் விலை 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த விலை குறைப்புக்கு 2 முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று OPEC வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள். இந்த ஆண்டு 2 மில்லியன் பேரல்கள் ஒரு நாளைக்கு தேவைப்படும் என்று OPEC தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு அறிவித்திருந்த கருத்துக்கணிப்பை விட இது 80,000 பேரல்கள் குறைவாகும்.
2025-ஆம் ஆண்டிலும் கச்சா எண்ணெயின் நுகர்வு குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான சீனாவில் கச்சா எண்ணெய்யின் நுகர்வு குறைந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் மின்சார வாகனங்களின் வளர்ச்சி என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications